ஐசிசியில் இந்தியா மீது பாகிஸ்தான் அதிரடி புகார்.. பெருந்தன்மை பற்றி தலைவர் விமர்சனம்.. வெளியான அறிக்கை

PCB Chairman
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற்று முடிந்தது. அந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை சாய்த்த இந்தியா தங்களது 2வது வெற்றியைப் பெற்றது. ஆனால் அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியினர் கை கொடுக்காமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் இயற்கை எய்தினார்கள். அதற்கு இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கை எடுத்து தக்க பதிலடி கொடுத்தது. அதே போல இப்போட்டியில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் டாஸ் வீசிய பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இந்திய கேப்டன் சூரியகுமார் கை கொடுக்கவில்லை.

- Advertisement -

பெருந்தன்மையற்ற இந்தியா:

அத்துடன் போட்டி முடிந்ததும் சிவம் துபே மற்றும் சூரியகுமார் ஆகியோர் பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்காமல் வெளியேறினர். இருப்பினும் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணிக்கு கை கொடுப்பதற்காக ஜென்டில்மேன்களாக களத்தில் காத்திருந்தனர். ஆனால் இந்திய அணியினர் தங்களுடைய பெவிலியனை அடைத்ததால் ஏமாற்றமடைந்த பாகிஸ்தான் வீரர்கள் அங்கிருந்து கை கொடுக்காமலேயே வெளியேறினார்.

அதற்கு பதிலடியாக போட்டியின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இந்நிலையில் விளையாட்டில் அரசியலை இழுக்கும் இந்தியாவின் செயல் விளையாட்டுக்கு எதிரானது என்று பாகிஸ்தான் வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார். ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

பாகிஸ்தான் புகார்

“இன்றையப் போட்டியில் விளையாட்டுத் தன்மை இல்லாதது முழுமையான ஏமாற்றம். விளையாட்டில் அரசியலை இழப்பது விளையாட்டின் உணர்வுக்கே எதிரானது. எதிர்கால வெற்றிகள் அனைத்து அணிகளாலும் பெருந்தன்மையுடன் கருணையுடன் கொண்டாடப்படும் என்று நம்புவோம்” எனக் கூறியுள்ளார். அத்துடன் இந்தியாவின் அந்த செயலுக்கு எதிராக ஐசிசியிடம் பாகிஸ்தான் புகார் செய்துள்ளது.

இதையும் படிங்க: பும்ராவை 6 பந்தில் 6 சிக்ஸ் நொறுக்குவாரு பாருங்க.. சவால்விட்ட பாக் வீரர்களை செஞ்சு விட்ட பாண்டியா

இது பற்றி போட்டியின் நடுவர் ஆண்டி ஃபைகிராப்ட் அவர்களிடம் பாகிஸ்தான் கொடுத்துள்ள புகார் பின்வருமாறு. “பாகிஸ்தான் அணியின் மேனேஜர் நவீத் அக்ரம் சீமா அதிகாரப்பூர்வமான புகாரை இந்திய அணிக்கு எதிராக செய்துள்ளார். அவர்களுடைய செயல் விளையாட்டின் உணர்வுக்கு எதிரானது. அவர்களுடைய செயலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்திலேயே எங்கள் கேப்டன் சல்மான் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்” என்று புகாரை பாகிஸ்தான் அணி அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

Advertisement