இந்திய அணியின் விராட் தற்போதய கேப்டனான விராட் கோலி இந்திய அணியை சிறப்பாக வலை நடத்தி வருகிறார். தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த தொடரில் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெரும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முஸ்தாக் முகமது உறுதி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முஸ்தாப் முகமது பாகிஸ்தான் அணிக்காக 1959-57 டெஸ்ட் மற்றும் 10 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் விராட் கோலி குறித்து அவர் பேசுகையில் ‘இந்திய அணியில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு தலைசிறந்த வீரர் இருந்திருக்கிறார். கவாஸ்கர், டெண்டுல்கர் என அந்த வரிசையில் தற்போது கோலி இருக்கிறார்.கோலி அனைத்து விதமான கிரிக்கெட்டுகளிலும் சிறந்த வீரராக உள்ளார்.
கோலியை கட்டுப்படுத்துவது என்பது எந்த ஒரு அணி கேப்டனுக்கும் கடினமான விடயமாக தான் இருக்கும். எனவே, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கோலி தலைமையிலான இந்திய அணி கண்டிப்பாக வெல்லும்.’ என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பிறகு வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரிலும் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு கோலி ஒரு சவாலாக இருப்பார் என்று முஸ்தாக் முகமது தெரிவித்துளளார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் ஆசிய கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அரபு நாடுகளில் துவங்கவுள்ளது. இதில் யுஏஇ, நேபால், சிங்கப்பூர், ஹாங் காங், ஓமன், மலேசியா ஆகிய நாடுகளுக்கு தகுதி போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.சமீபத்தில் இந்த போட்டிக்கான அட்டைவனை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி செப்டம்பர் 18 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், 19 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் விளையாட உள்ளது என்பது குறிப்பைடத்தக்கது.