Pakistan : டிக்கெட் காசை திரும்ப கேட்ட பாகிஸ்தான் ரசிகர்கள் – காரணம் தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான நேற்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேற்று ட்ரெண்ட் பிரிட்ஜ்

Pakistan-Fans
- Advertisement -

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான நேற்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேற்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதின.

pak

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சினை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக பக்கர் சமான் 22 ரன்களும், பாபர் அசாம் 22 ரன்களையும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தாமஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பிறகு 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கெயில் 50 ரன்களை அடித்தார்.

gayle

இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் தொகையினை பாகிஸ்தான் ரசிகர்கள் திரும்ப கேட்டுள்ளனர். அதனை மைதான நிர்வாகமும் சம்மதித்து திரும்ப அளிக்க உள்ளது. அதன் காரணம் யாதெனில் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்த ரசிகர்கள் போட்டியை காண மைதானம் வந்தபோது மைதானத்தின் நிர்வாகம் மூலம் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பெருமளவு பாகிஸ்தான் ரசிகர்கள் பாதி போட்டியின்போதே மைதானத்திற்குள் வந்தனர்.

Thomas

அதற்குள் பாகிஸ்தான் அணி சொற்ப ரன்களுக்கு சுருண்டது மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் போட்டியை விரைவாக முடித்தது. இதனால் கடுப்பான பாகிஸ்தான் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட் தொகையை திருப்பிக்கேட்டனர். தங்களது தவறை உணர்ந்த மைதான நிறைவாக அவர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement