ரத்தத்தில் கிரிக்கெட் ஊறிப்போன ஒருவரால் மட்டுமே இது முடியும் – ஐ.சி.சி வெளியிட்ட ரசிகரின் புகைப்படம்

Fan
- Advertisement -

பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஹசன் தஸ்லிம் என்பவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் சிறுவயதில் இருந்தே பாகிஸ்தான் விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒரு மேட்ச் கூட விடாமல் பார்த்துவிடுவது வழக்கம்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அன்றுதான் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியையும் அவர் தவறாமல் பார்த்து விட வேண்டும் என்பதற்காக செய்த செயல்தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதன்படி இந்த 5 ஆம் தேதி போட்டியை தவறவிடாமல் பார்ப்பதற்காக அந்த ரசிகர் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டே திருமண சடங்குகளை பங்கேற்றார்.

மேலும் இதனை புகைப்படமாக பதிவிட்ட அவர் தான் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்றும் எப்போதும் மேட்ச் பார்ப்பதை தவறவிட்டதில்லை எனவே பாகிஸ்தான் அணி எந்த நேரத்தில் விளையாடினாலும் அதை போட்டியை பார்த்த பின்தான் நான் தூங்குவேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை அப்படியே ஐசிசி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. ஐ.சி.சி யின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement