MS Dhoni : தோனியின் பெயரை வைத்து பாகிஸ்தான் ரசிகர் செய்த செயல் – இணையத்தை அலறவிட்ட தோனியின் ரசிகர்

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

dhoniplay

- Advertisement -

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் பரவலாக காணப்படுகின்றனர். தற்போது பாகிஸ்தானை சேர்ந்த தோனி ரசிகர் ஒருவர் செய்த செயல் தற்போது இணையத்தில் படு டிரெண்டாகி வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த அந்த ரசிகர் இந்த கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் கொண்டாடுவதற்காக பாகிஸ்தான் அணியின் ஜெர்சி ஒன்றை வாங்கியுள்ளார்.

அந்த ஜெர்ஸியில் தோனி பெயரை பிரிண்ட் செய்து அதன்கீழ் 7 என்று தோனியின் என்னை பிரிண்ட் செய்துள்ளார். பின்னர் இந்த ஜெர்சியை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். தோனியின் மீது அவர் வைத்திருக்கும் அன்பின் காரணமாக அவர் செய்த இந்த செயலை இணையத்தில் பலரும் வரவேற்றுள்ளனர். மேலும் இந்த பதிவு காட்டுத்தீ போல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முன்னணி வீரரான தோனிக்கு பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர் செய்த இந்த செயல் தற்போது வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement