கழுதைகளை கூட்டிகிட்டு போயிருந்தால் கூட வென்றிருக்கலாம் – பாகிஸ்தான் டீமை சாடும் முன்னாள் பாக் வீரர்கள்

Pak Shadab Khan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அக்டோபர் 27ஆம் தேதியன்று நடைபெற்ற 24வது லீக் போட்டியில் கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வே வலுவான பாகிஸ்தானை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்று அதிர்ச்சி கொடுத்தது. பெர்த் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் ஜிம்பாப்வே நிர்ணயித்த 131 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 4, முகமது ரிஸ்வான் 14 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மிடில் ஆர்டரில் ஷான் மசூட் 44 ரன்கள் எடுத்ததை தவிர எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

குறிப்பாக கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது 2 விக்கெட்டுகளை இழந்து 9 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி படுதோல்வியை சந்தித்தது. முன்னதாக இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியிலும் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்ட பாகிஸ்தான் 2 போட்டிகளில் 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. இதனால் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ஆரம்பத்திலேயே 50 – 70% அந்த அணி கோட்டை விட்டுள்ளது பாகிஸ்தான் ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

- Advertisement -

கொந்தளிக்கும் பாகிஸ்தான்:
குறிப்பாக இந்த தோல்வி வெட்கக்கேடானது என்றும் சங்கடமாக உள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் இது போன்ற சுமாரான வீரர்களை தேர்வு செய்ததற்கு இந்த தோல்வியை தகுதியானது என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் ஜிம்பாப்வே போன்ற அணிக்கு எதிராக தோற்றது மிகவும் ஏமாற்றமளிப்பதாக தெரிவிக்கும் அவர் இப்படி நடக்கும் என்று 2 மாதங்கள் முன்னதாகவே சொன்னதாக கூறியுள்ளார். அதனால் தேர்வுக்குழு மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ள அவர் சுமாராக கேப்டன்ஷிப் பாபர் அசாம் இருக்கும் வரை வெற்றி பெற முடியாதென்று சாடியுள்ளார்.

அதே போல் மற்றொரு முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் மிடில் ஆர்டர் சுமாராக இருக்கிறது என்பதை தெரிந்தும் சோயப் மாலிக் போன்ற அனுபவ வீரரை கழற்றி விட்டு கழுதைகளுக்கு கூட சமமில்லாத வீரர்களை தேர்வு செய்த கேப்டன் பாபர் அசாமை சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த ஒரு வருடமாகவே பாகிஸ்தான் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளதை நான் அறிவேன். நான் கேப்டனாக இருந்தால் இங்கு என்னுடன் வர்ணனை செய்யும் சோயப் மாலிக்கை தேர்வு செய்திருப்பேன். ஒருவேளை உலகக் கோப்பையை வெல்வதற்காக கழுதையை என்னுடைய தந்தையாக உருவாக்க வேண்டுமானால் நான் அதை செய்வேன். மிகவும் அறிவுள்ள பாபர் அசாம் இது உள்ளூரில் விளையாடும் லோக்கல் அணி கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்”

- Advertisement -

“மேலும் நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் ஆஸ்திரேலியாவில் சோயப் மாலிக்கை தேர்வு செய்திருப்பேன். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் சார்ஜா, துபாய் அல்லது பாகிஸ்தான் போல சுமாராக பிட்ச்கள் இருக்காது” என்று கூறினார். மேலும் இந்த அணி வெல்லாது என்பதை தேர்வு செய்யப்பட்ட முதல் நாளன்றே சொன்னதாக தெரிவிக்கும் பிரபல பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் இதற்கு காரணமாக இருந்த தேர்வுக்குழு தலைவரும் பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஷ் ராஜாவும் பதவி விலக வேண்டுமென வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.

இதுபோக வெறும் 130 ரன்களை எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது தமக்கு வேதனை அளிப்பதாக கூறும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியான்தத் இவர்கள் முழு நேர கிரிக்கெட் வீரர்கள் தானா அல்லது லோக்கல் வீரர்களா என்று சந்தேகமாக உள்ளதாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : எளிதான ஸ்டம்பிங்கை விட்ட டிகே, தோனி – தோனி என கூச்சலிட்ட ரசிகர்கள், பண்ட்க்கு வாய்ப்பளிக்க கோரிக்கை

மேலும் ரசித் லதீப், சல்மான் பட் உட்பட கிட்டத்தட்ட அனைத்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் பாகிஸ்தான் அணியை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement