உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட்டதற்க்கு காரணம் பி.சி.சி.ஐ தான் – அக்தர் குற்றச்சாட்டு

Akhtar

இந்தியாவில் இந்த வருடம் ஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை நடக்க இருந்தது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதன் பின்னர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. தற்போதைய நிலை மெல்ல மெல்ல திரும்புவதால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் யூ.ஏ.இ நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்திருந்தது.

ipl

ஆனால் அந்த காலகட்டத்தில் டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதாக இருந்தது .இந்நிலையில் 16 அணிகள் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்து டி20 உலகக் கோப்பையை இந்த வருடம் நடத்துவது கடினம் என்று அடுத்த வருடத்திற்கு ஐசிசி தள்ளி வைத்தது.
இதனை வைத்து பிசிசிஐ இந்த வருடம் ஐபிஎல் தொடரை நடத்த விடும்.

இதன் காரணமாக கடுப்பான பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் சோயிப் அக்தர் மற்றும் ரஷீத் லதீப் ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள் … அதாவது டி20 உலகக் கோப்பையை தள்ளி வைத்ததற்கு பின்னணியில் இந்திய கிரிக்கெட் வாரியம் தான் இருக்கிறது.

இதனை நான் முன்பே சொன்னது போல இதனை நடக்க விடமாட்டார்கள். ஐபிஎல் தொடருக்கு எந்த சேதமும் வந்துவிடக்கூடாது என உலக கோப்பையை தள்ளி வைத்திருக்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால் ஆஸ்திரேலியாவில் தற்போது இருக்கும் சூழ்நிலையை கணக்கில் கொண்டே ஐ.சி.சி இந்த முடிவினை எடுத்துள்ளது.

- Advertisement -

Akhtar

பாகிஸ்தான் வீரர்கள் இவ்வாறு கூறுவது புதிதல்ல. எப்போதும் இந்திய அணியையும், கிரிக்கெட் வாரியத்தையும் பலமுறை சீண்டியுள்ளார்கள். இதனால் அக்தரின் இந்த கருத்திற்கு இந்திய ரசிகர்கள் சமூகவலைத்தளம் மூலமாக தங்களது கண்டனத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.