கடந்த 1996-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் இந்த சாம்பியன் டிராபி தொடரை காண மிகவும் ஆர்வாரத்துடன் காத்திருந்தனர்.
பெரும் பின்னடைவை சந்திக்கவிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் :
அந்த வகையில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி எதிர்பார்த்தபடியே சாம்பியன்ஸ் டிராப் தொடரும் பாகிஸ்தானில் துவங்கியது. இந்த தொடரில் பங்கேற்ற 8 அணிகளில் நடப்பு சாம்பியனாக அணி குரூப் ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுடன் கலந்து கொண்ட பாகிஸ்தான அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரில் இறுதிப் போட்டி வரை செல்லும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் பாகிஸ்தான் இப்படி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே வெளியேறி உள்ளதால் இனி வரும் போட்டிகளை காண ரசிகர்கள் விரும்பி மைதானத்திற்கு மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
அதனால் மிகப்பெரிய அளவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பு ஏற்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பாகிஸ்தான் விளையாடாத ஒரு போட்டியை மக்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள். எனவே மீதமுள்ள போட்டியை காண மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.
இனி ரசிகர்கள் மைதானத்திற்கு வருவதை உறுதி செய்வதே பெரும் சவால்தான். 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி நடத்தும் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் போட்டி நடத்துவதற்கான தொகை, டிக்கெட் விற்பனை மற்றும் எங்களுக்கு வர வேண்டிய நிதி என அனைத்தும் ஐசிசி-யிடம் இருந்து வந்தாலும் இனிவரும் நாட்களில் இங்கு நடைபெறும் போட்டிகளை காண ரசிகர்கள் வர மாட்டார்கள்.
இதையும் படிங்க : ஐ.சி.சி தொடர் என்று வந்தாலே ரச்சின் ரவீந்திரா இதை செய்து விடுகிறார் – மிட்சல் சான்ட்னர் பாராட்டு
எனவே ஸ்பான்சர் கிடைப்பதிலும் பெரிய பாதிப்பு ஏற்படும். இந்த தோல்வி நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை மிக மோசமான நிலைக்கு தள்ளி உள்ளதாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.



