Worldcup : 27 வருடம் கழித்து உலகக்கோப்பை தொடரில் படுமோசமான சாதனையை பதிவு செய்த – பாகிஸ்தான்

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான நேற்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேற்று ட்ரெண்ட் பிரிட்ஜ்

WI-vsPAK
- Advertisement -

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான நேற்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேற்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதின.

pak

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சினை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக பக்கர் சமான் 22 ரன்களும், பாபர் அசாம் 22 ரன்களையும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தாமஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பிறகு 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கெயில் 50 ரன்களை அடித்தார்.

Russell-1

இந்த போட்டியின் மூலம் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் தனது மோசமான சாதனை ஒன்றினை பதிவு செய்துள்ளது. அதாவது இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 105 ரன்களை மட்டுமே குவித்தது. இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் இரண்டாவது குறைந்த பட்ச ஸ்கோராக இந்த 105 ரன்கள் அமைந்தது. இதற்க்கு முன்னர் சுமார் 27 வருடங்களுக்கு முன் 1992 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் 74 ரன்கள் அடித்தது பாகிஸ்தான் அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement