ஐ.பி.எல் நடந்து வரும் கேப்புல இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான் – ஐ.சி.சி வெளியிட்ட ரேங்கிங் லிஸ்ட் இதோ

Babar Azam Rohit Sharma IND vs PAK
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் தொடர்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியாவில் ஐபிஎல் தொடரானது நடைபெற்று வரும் வேளையில் ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் இருக்கிறது.

IND-vs-AUS

இந்நிலையில் இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.

- Advertisement -

இந்த தொடரை பாகிஸ்தான் அணி நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றியதால் தற்போது பாகிஸ்தான அணி 116 புள்ளிகளுடன் இந்திய அணியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி ஒருநாள் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணியானது 115 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

VIrat Kohli IND vs PAK

அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்த பாகிஸ்தான அணி ஒருநாள் தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் வீழ்த்தியதாலே ஐசிசி புள்ளி பட்டியலில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் அணி ஐந்து பூஜ்யம் (5-0) என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இருந்தால் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கவும் வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த பட்டியலில் நியூசிலாந்து அணி நான்காவது இடத்திலும், இங்கிலாந்து அணி ஐந்தாவது இடத்திலும், அதற்கடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IPL 2023 : சிஎஸ்கே எவ்ளவோ பரவால்ல, உள்ளூர் இந்திய வீரர்களை பார்க்காத ஆர்சிபி – கோப்பை வாங்க திணறும் புள்ளிவிவரம்

டி20 கிரிக்கெட் தரவரிசையை பொருத்தவரை இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. அதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தோனிக்காக ரசிகர்கள் என்னோட ஆட்டத்தை காலி பண்ண பாக்குறாங்க – சென்னை ரசிகர்கள் குறித்து பேசிய ஜடேஜா

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54-ஆவது லீக் போட்டியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது மட்டுமின்றி பிளே ஆப் சுற்றிற்கான தங்களது வாய்ப்பினையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது என்றே கூறலாம்.

இந்நிலையில் அந்த போட்டியின் போது சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் 21 ரன்கள் அடித்தது மட்டுமின்றி பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்ததால் அவரது அந்த சிறப்பான பங்களிப்பு காரணமாக ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் அந்த போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருதினை வென்ற ஜடேஜா வெற்றி குறித்தும், சென்னை அணி ரசிகர்கள் வேண்டுதல் குறித்தும் சில ஜாலியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : ஒரு ஸ்பின்னராக நான் சேப்பாக்கம் மைதானத்தில் பந்து வீசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் இங்கு கிடைக்கும் டர்ன் பற்றி எனக்கு நன்றாக தெரியும்.

அதோடு நாங்கள் இந்த மைதானத்திலேயே நிறைய பயிற்சி செய்வதால் எங்களுக்கு லைன் மற்றும் லென்த் என்ன என்று தெரியும். அதுதான் எங்களுடைய ஹோம் கிரவுண்டில் எங்களுக்கு கிடைக்கும் கூடுதல் சாதகம் என்று கூறினார். மேலும் தோனியின் ரசிகர்கள் குறித்து பேசிய ஜடேஜா கூறுகையில் : நான் ஏழாவது வீரராக பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து “தோனி, தோனி” என கத்தி ஆரவாரம் செய்கிறார்கள். அதேபோன்று நான் ஆட்டமிழந்து வெளியேறும் போது தோனி உள்ளே வருவார் என்பதனால் நான் எப்போது அவுட் ஆவேன் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறிய ஜடேஜா கூறினார்.

எது எப்படி இருந்தாலும் எனக்கு அணி வெற்றி பெற்றால் போதும் என்று ஜாலியாக சிரித்துக்கொண்டே ஜடேஜா பேசினார். இப்படி சென்னை ரசிகர்கள் பற்றி ஜடேஜா பேசிய இந்த கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளன. ஜடேஜா கூறுவதைப் போன்று சேப்பாக்கம் மைதானத்தில் எப்போது போட்டி நடைபெற்றாலும் ஜடேஜா ஆட்டமிழந்து வெளியேறும் போது மகிழ்ச்சி அடைந்து தோனிக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பதை நாமும் பார்த்து வருகிறோம்.

Advertisement