டம்மினு நினைக்காதீங்க, அடி அம்மி மாதிரி இருக்கும் – இந்திய பவுலர்களை பாராட்டி பாகிஸ்தானை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்

INDIA Arshdeep Singh Harshal Patel
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்ல வேண்டுமென்ற முனைப்புடன் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் பயிற்சிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை தன்னுடைய முதல் போட்டியில் எதிர்கொள்ள புத்துணர்ச்சியுடன் தயாராகி வருகின்றனர். இருப்பினும் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய இந்தியாவுக்கு மினி உலகக் கோப்பையை போன்ற சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வியும் கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Rohit Sharma Bhuvneswar Kumar

- Advertisement -

குறிப்பாக போட்டியின் அனைத்து நேரங்களிலும் துல்லியமாக பந்து வீசி டெத் ஓவர்களில் யார்க்கர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை திணறடித்து விக்கெட்களை எடுத்து வெற்றிகளைப் பெற்றுத் தரக்கூடிய கருப்பு குதிரையாக கருதப்படும் பும்ரா வெளியேறியது இந்தியாவுக்கு உண்மையாகவே பின்னடைவாகும். ஏனெனில் அவரைத் தவிர்த்து இடம் பிடித்துள்ள புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் சமீபத்திய போட்டிகளில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி சுமாரான பார்மில் உள்ளனர்.

டம்மி கிடையாது:
அதிலும் குறிப்பாக 140 கி.மீ வேகத்தில் வீசினால் மட்டுமே ஓரளவு சமாளிக்கக் கூடிய வேகத்துக்கு கை கொடுக்கும் ஆஸ்திரேலிய மைதானங்களில் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அரர்ஷதீப் சிங் ஆகியோர் சராசரியாக 120 – 130+ வேகத்தில் மட்டுமே வீசுவார்கள் என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க முடியுமா என்ற கவலை இந்தியர்களிடம் காணப்படுகிறது. அதே சமயம் பும்ராவுக்கு பதிலாக தேர்வாகியுள்ள முஹம்மது ஷமி 140+ கி.மீ வேகத்தில் வீசக்கூடியவர் என்பதுடன் பயிற்சிப் போட்டியில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற வைத்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

axar Patel Virat Kohli Mohammed Shami

மறுபுறம் பாகிஸ்தான் அணியில் ஏற்கனவே அதிவேகத்தில் வீசக்கூடிய ஹரிஷ் ரவூப், நசீம் ஷா ஆகியோருடன் கடந்த முறை வரலாற்று தோல்வியை சந்திக்க காரணமாக இருந்த ஷாஹீன் அஃப்ரிடி காயத்திலிருந்து குணமடைந்து திரும்பி பாலத்தை சேர்க்கிறார். ஆனாலும் இந்திய அணியில் 4இல் 3 பவுலர்கள் மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது இந்திய ரசிகர்களுக்கு கவலையளிப்பதாகவே இருக்கிறது. இந்நிலையில் வெற்றிக்கு வேகத்தை விட விவேகமே முக்கியமென தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத் இந்த உலக கோப்பையில் புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகிய இந்திய பவுலர்கள் கடுமையான சவாலை கொடுப்பார்கள் என்று பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது சமி ஆகியோர் தரமான சீம் பவுலர்கள் என்பதால் அவர்களை எதிர்கொள்வதில் பாகிஸ்தானுக்கு சிரமம் ஏற்படும். ஏனெனில் அவர்களுக்கு எதிராக அதிரடியாக ரன்களை சேர்ப்பது கடினமாகும். குறிப்பாக மைதானத்தில் சற்று உதவி கிடைத்தால் சீம் பவுலரான முகமது ஷமி பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவார். அதேபோல் ஸ்விங், சீம் சூழ்நிலைகளில் புவனேஸ்வர் குமார் அற்புதமாக செயல்படக் கூடியவர்”

Aakib Javed

“மேலும் இந்த உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறாமல் இருந்திருந்தால் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியது அவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் பிளாட்டான பிட்ச்களில் கூட யார்க்கர், பவுன்ஸ், வேரியேசன் போன்ற அம்சங்களை உருவாக்கி பும்ரா விக்கெட்டுகளை எடுத்து தரக்கூடியவர். இருப்பினும் அவர் இல்லாமலேயே ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர்” என்று பாராட்டினார்.

அவர் கூறுவது போல புவனேஸ்வர் குமார் கடைசி கட்ட ஓவர்களில் தடுமாறுவார் என்றாலும் உலகின் அனைத்து கிரிக்கெட் மைதானங்களிலும் பவர் பிளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்து மிரட்டக் கூடியவர். மேலும் பெரிய மைதானங்களை மைதானங்களை கொண்ட ஆஸ்திரேலியாவில் அவரது ஸ்லோ பந்துகள் கேட்ச்களை உருவாக்கி விக்கெட்டுக்களை எடுக்க உதவும். மறுபுறம் வேகத்துக்கு கைகொடுக்கும் ஆஸ்திரேலிய மைதானங்கள் முகமது ஷமி போன்ற சீம் எனப்படும் பந்தின் மையப்பகுதியை பிடித்துப் போடும் பவுலர்களுக்கு இயற்கையாகவே கைகொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement