- Advertisement -
உலக கிரிக்கெட்

வெறும் 15 ரூபாய் தான்.. வங்கதேச டெஸ்ட் தொடருக்கான டிக்கெட் விலையை குறைந்த பாகிஸ்தான்.. காரணம் என்ன?

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. அந்தத் தொடரின் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவில்பிண்டி நகரிலும் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சியிலும் துவங்க உள்ளது.

அதில் வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முன்னேறுவதற்கு இரு அணிகளும் போராட உள்ளன. குறிப்பாக சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகளிடம் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதனால் இத்தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்புடன் பாகிஸ்தான் களமிறங்க உள்ளது.

- Advertisement -

15 ரூபாய் டிக்கெட்:
இந்நிலையில் அந்தத் தொடருக்கான டிக்கெட் விலை பற்றிய விவரங்களை பாகிஸ்தான் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் ஆச்சரியப்படும் வகையில் குறைந்தபட்ச டிக்கெட் விலை வெறும் 50 பாகிஸ்தான் ரூபாயாக நிர்ணிக்கப்பட்டுள்ளது. அது இந்திய மதிப்பில் வெறும் 15 ரூபாய் என்பது ரசிகர்களை திரும்பி பார்க்க வைப்பதாக இருக்கிறது.

இருப்பினும் பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டை பெரும்பாலான ரசிகர்கள் நேரடியாக சென்று பார்க்க மாட்டார்கள். போதாக்குறைக்கு சமீப காலங்களில் பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே பரிதாபமாக தோற்றது. அது போக 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்ற பாகிஸ்தான் பரம எதிரி இந்தியாவிடமும் 119 ரன்களை அடிக்க முடியாமல் தோற்றது.

- Advertisement -

அது போக பாகிஸ்தானை விட வங்கதேசம் குறைந்த பலத்தைக் கொண்ட அணியாக கருதப்படுகிறது. அதனால் அந்த தொடரை பார்க்க பெரும்பாலான ரசிகர்கள் வரமாட்டார்கள் என்று பாகிஸ்தான் வாரியம் கருதுகிறது. அதனால் குறைந்தபட்ச டிக்கெட் விலை இவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் குளிர்சாதன வசதியுடன் கூடிய உச்சகட்ட டிக்கெட் 2,50,000 பாகிஸ்தான் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பேட்டுக்கு ஓய்வு கொடுத்து இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றும் பதிவை வெளியிட்ட ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்ஷேன்

மேலும் விஐபி டிக்கெட் 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே ஞாயிற்றுக்கிழமை போன்ற வார இறுதி நாட்களில் 500 – 600 பாகிஸ்தான் ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு பாகிஸ்தான் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மறுபுறம் டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளதால் மைதானத்தை தங்கள் நாட்டு ரசிகர்கள் நிரப்புவார்கள் என்று பாகிஸ்தான் வாரியம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -