அடுத்த முறையாவது உண்மையா நடந்துக்கோங்க, பழி தீர்ப்போம் – பாகிஸ்தான் ஜிம்பாப்வே ஜனாதிபதிகளுக்கு இடையே மோதல்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அக்டோபர் 27ஆம் தேதியன்று நடைபெற்ற 24வது லீக் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் பாகிஸ்தானை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி சுவைத்தது. பெர்த் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 130/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 31 (28) ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் 4 விக்கெட்களை எடுத்தார்.

அதை தொடர்ந்து 131 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு அதிரடி தொடக்கத்தை கொடுக்க வேண்டிய கேப்டன் பாபர் அசாம் 4 (9) முஹம்மது ரிஸ்வான் 14 (16) என தொடக்க வீரர்கள் சொற் பரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். இருப்பினும் மிடில் ஆர்டரில் ஷான் மசூட் மட்டும் நங்கூரமாக நின்று 44 (38) ரன்கள் எடுத்தாலும் இப்திகர் அஹமது 5, சடாப் கான் 17, ஹைதர் அலி 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் ஏற்பட்ட பரபரப்பில் கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

பழிக்கு பழி:
ப்ராட் எவன்ஸ் வீசிய அந்த ஓவரின் 2 விக்கெட்டுகளை இழந்து 9 ரன்களை மட்டுமே எடுத்த பாகிஸ்தான் 20 ஓவரில் 129/8 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாப தோல்வியை சந்தித்தது. அதை விட இந்த சரித்திர வெற்றியால் பாகிஸ்தான் செய்த துரோகத்திற்கு ஜிம்பாப்வே பழி தீர்த்துக் கொண்டது. அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நடைபெற்ற ஒரு அரசு விவசாயத் துறை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் எனப்படும் ரோவன் அட்கின்சனை அனுப்புவதாக பாகிஸ்தான் உறுதியளித்தது. ஆனால் அவருக்கு பதிலாக பார்ப்பதற்கு கிட்டத்தட்ட அவரைப் போலவே இருக்கும் தங்களது நாட்டைச் சேர்ந்த முகமது ஆசிப் எனப்படும் போலியான மிஸ்டர் பீனை ஜிம்பாப்வேவுக்கு பாகிஸ்தான் அனுப்பியது.

நிஜத்துக்கும் போலிக்கும் அடையாளம் தெரியாத ஜிம்பாப்பே மக்களும் அரசும் அவரை உண்மையான மிஸ்டர் பீனாக நினைத்து மாலை மரியாதை போட்டு தங்களது நாட்டில் பவனி வரவைத்து புகைப்படங்களை எடுத்து கொண்டாடினார்கள். அத்துடன் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக அதிகப்படியான பணத்தையும் அவர்கள் கொடுத்துள்ளார்கள். ஆனால் ஆரம்பத்தில் தெரியாத அந்த உண்மை நாட்கள் செல்ல செல்ல சமூக வலைதளங்களின் வாயிலாக தெரிய வந்ததால் சமீப கலங்களாகவே பாகிஸ்தான் மீது ஜிம்பாவே நாட்டவர்கள் காட்டத்துடன் இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

அந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின் இப்போட்டிக்கு தயாராக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை அந்நாட்டு வாரியம் ட்விட்டரில் பதிவிட்டது. அதை பார்த்த ஒரு ஜிம்பாப்வே ரசிகர் “ஒருமுறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புவதாக சொல்லி போலியை அனுப்பி எங்களை ஏமாற்றியதை நாங்கள் மறக்க மாட்டோம். அதற்கு நாளை இப்போட்டியில் நாங்கள் பதிலடி கொடுப்போம், முடிந்தால் மழை வந்து காப்பாற்றுமாறு வேண்டிக் கொள்ளுங்கள்” என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார். இறுதியில் அவர் எச்சரித்தது போலவே ஜிம்பாப்வே வென்றதால் ஹராரே நகரில் இருந்த அந்நாட்டு மக்கள் அந்த வெற்றியை கொண்டாடி தீர்த்தார்கள்.

மேலும் இந்த விவகாரத்தை அறிந்து மட்டமான செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானை வீரேந்திர சேவாக் முதல் ஏராளமான முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கலாய்த்து தள்ளினர். அந்த நிலையில் ஜிம்பாப்வே ஜனாதிபதி “தம்புட்ஜோ மனங்கங்வா” தனது ட்விட்டரில் ஜிம்பாப்வே வெற்றியை பாராட்டி அடுத்த முறையாவது உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள் வென்று பாகிஸ்தானை வெளிப்படையாகவே விமர்சித்தார்.

ஆனால் தவறும் நம்பிக்கை துரோகம் செய்தும் கூச்சப்படாத பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டு ஜனாதிபதி “செபாஷ் சரிஃப்” ஜிம்பாப்வே ஜனாதிபதிக்கு பதிலடி கொடுத்தது பின்வருமாறு. “எங்களிடம் உண்மையான மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மையான கிரிக்கெட்டை விளையாடும் நேர்மை உள்ளது. அத்துடன் பாகிஸ்தானியர்களான நாங்கள் இதிலிருந்து கொதித்தெழுவதை வேடிக்கையான பொழுதுபோக்காக கொண்டுள்ளோம். மிஸ்டர் பிரசிடெண்ட் உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்களது அணி இன்று சிறப்பாக விளையாடியது” என்று கூறினார்.

அதாவது எங்களிடம் மிஸ்டர் பீன் இல்லை என்றாலும் வரும் காலங்களில் இதற்கு பழிக்கு பழி தீர்க்கும் திறமை உள்ளதென்று மறைமுகமாக ஜிம்பாப்வே ஜனாதிபதிக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி பதிலடி கொடுத்துள்ளது இந்த விவகாரத்தில் மேலும் சூட்டை கிளப்பியுள்ளது.

Advertisement