PAK vs AFG : பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தின் வெளியே சண்டை – கலவரத்தின் பின்னணி இதுதான்

உலகக் கோப்பை தொடரின் 36 வது போட்டி லீட்ஸ் மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் குல்பதின் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், சர்பிராஸ் அகமது தலைமை

- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 36 வது போட்டி லீட்ஸ் மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் குல்பதின் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

pak vs afg

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான் அணி அதன்படி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி குவித்தது. அதிகபட்சமாக அஸ்கர் ஆப்கான் 42 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் சார்பாக ஷாகின் அப்ரிடி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர்களும் ஆப்கானிஸ்தான் ரசிகர்களும் மைதானத்துக்கு வெளியே சண்டை போட்டுக் கொண்டனர். அந்த கலவரத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதுயாதெனில் பலுசிஸ்தானுக்கு விடுதலை என்ற முழக்கத்துடன் கூடிய பலனை ஆப்கான் ரசிகர்கள் சிலர் பறக்க விட்டுள்ளனர். இதனை கண்ட பாகிஸ்தான் ரசிகர்கள் அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் மைதானத்தின் வெளியே பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட மைதான பாதுகாப்பு ஊழியர்கள் இருதரப்பு கலவரக்காரர்களையும் விலக்கிவிட்டு சமாதானம் செய்தனர். பாகிஸ்தான் அணிக்கு இது முக்கியமான போட்டி ஆகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு இது ஒரு முக்கியமான போட்டி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement