உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வு..! அதிரடி வீரர் திடீர் அறிவிப்பு..! – யார் தெரியுமா..?

shoaib

அடுத்த வருடம் நடைபெற உள்ள கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு பின்னர்,சர்வேதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்தது ஒய்வு பெற போவதாக பாகிஸ்தான் அணியின் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். இருப்பினும் தனது உடல் பிட்னஸை பொறுத்து டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
shoaib-malik

பாகிஸ்தான் அணியின் ஆல் ரௌண்டரான இவர், இதுவரை 261 ஒருநாள் போட்டிகள், 35 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், ஒரு நாள் போட்டிகளில் 6975 ரன்களையும் குவித்துள்ளார். இதுவரை 56 போட்டிகளில் பாகிஸ்தான் அணியை தலைமை ஏற்று நடத்தியுள்ள சோயிப் மாலிக், அதில் 36 போட்டிகளில் வெற்றியையும் 18 போட்டிகளில் தோல்வியையும் கண்டுள்ளார்.

சமீபத்தில் தனது ஒய்வு குறித்து அறிவித்துள்ள சோயிப் மாலிக், பேட்டி ஒன்றில் பேசுகையில் ‘நீங்கள் ஒரு இலக்கை நிர்ணயித்து வைத்திருந்தால், அது உங்களை தொடர்ந்து முன்னேற வைத்துக் கொண்டு இருக்கும். நான் எனக்கென்று சில இலக்குகைகளை நிர்ணயித்து கொண்டேன். நாங்கள் உலக கோப்பையை தவிர செம்பியன்ஸ் ட்ரோபி மற்றும் உலக டி20 என்ற இரு பெரிய கோப்பைகளையும் வென்று விட்டோம். ‘
malik

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் வெற்றி பெறாதது தான் குறையாக உள்ளது. அந்த ஒரு குறிக்கோளுடன் தான் நான் கடினமாக உழைத்து வருகிறேன். என் மீதும், இளம் வீரர்கள் மீதும் நான் பெரும் நம்பிக்கையை வைத்துள்ளேன். கண்டிப்பாக நாங்கள் இந்த முறை ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் ” என்று கூறியுள்ளார்.