
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அத்தொடரில் பாபர் அசாம் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கழற்றி விட்டுள்ள பாகிஸ்தான் சல்மான் ஆகா தலைமையில் இளம் வீரர்களை களமிறக்கியுள்ளது. அந்த சூழ்நிலையில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டி ஜூலை 20ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்காவில் நடைபெற்றது.
இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு அனுபவ வீரர் ஃபகார் ஜமான் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் சாய்ம் ஆயுப் 6, முகமது ஹாரிஸ் கேப்டன் சல்மான் ஆகா 3, ஹசன் நவாஸ் 0, முகமத் நவாஸ் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
அதனால் 46/5 என ஆரம்பத்திலேயே சரிந்த பாகிஸ்தானுக்கு மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஃபகார் ஜமான் 44 (34) ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டானார். மிடில் ஆர்டரில் அப்பாஸ் அப்ரிடி 18 (23), குஸ்தில் ஷா 22 (24) ரன்கள் அடித்து மெதுவாக விளையாடி பின்னடைவை ஏற்படுத்தினர். கடைசியில் பகிம் அஷ்ரப் 5, சல்மான் மிர்சா 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள்.
அதன் காரணமாக 19.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் வெறும் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கத்துக்குட்டியாக கருதப்படும் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக பாகிஸ்தான் ஆல் அவுட்டாகி அவமானச் சாதனையைப் படைத்தது. இதற்கு முன் வங்கதேசத்திடம் பாகிஸ்தான் ஒருமுறை கூட ஆல் அவுட்டானதில்லை.
ஆனால் இப்போட்டியில் ஆல் அவுட்டான பாகிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு எதிராக தங்களுடைய குறைந்தபட்ச டி20 கோரையும் பதிவு செய்தது. மறுபுறம் பாகிஸ்தானை முதல் முறையாக ஆல் அவுட் செய்து அசத்திய வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக முஸ்தஃபிசுர் ரஹ்மான் 2, டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். இதை அடுத்து பாகிஸ்தானை தோற்கடிக்கும் முனைப்புடன் வங்கதேசம் பேட்டிங் செய்து வருகிறது.
இதையும் படிங்க: தோனிக்காக சமாதனம் செய்து என்னுடைய தந்தையை சேப்பாக்கத்திற்கு அழைத்து வந்தேன் – உர்வில் படேல் பகிர்வு
கடந்த வருடம் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோற்கடித்து வங்கதேசம் சரித்திர சாதனை படைத்தது. அதே உத்வேகத்துடன் இந்தத் தொடரில் உங்களுடைய மண்ணில் பாகிஸ்தானை தோற்கடிக்கும் முனைப்புடன் வங்கதேசம் விளையாடுகிறது. அவர்களுக்கு வங்கதேச ரசிகர்கள் சொந்த மண்ணில் உச்சகட்ட ஆதரவைக் கொடுத்து வருகின்றனர்.