ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 6 வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் இத்தொடரில் 2வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. அத்துடன் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலும் 7 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்திய அணி பாகிஸ்தானை ஒரு தலைப்பட்சமாக வீழ்த்தி வருகிறது.
முன்னதாக துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் அரை சதத்தை அடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் தம்முடைய பேட்டை வைத்து துப்பாக்கியால் சுடுவது போல் இந்தியாவை கிண்டலடிக்கும் வகையில் கொண்டாடினார். அதாவது ஆபரேஷன் சிந்தூரில் உண்மையில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வென்றது. ஆனால் பாகிஸ்தான் அரசாங்கமும் ராணுவமும் இந்தியாவை தாங்கள் தோற்கடித்ததாக அந்நாட்டு மக்களை நம்ப வைத்துள்ளது.
மண்ணைக் கவ்வியும் கிண்டல்:
அதை நம்பிக் கொண்டு எல்லையில் இந்தியாவை ராணுவ வீரர்கள் வீழ்த்தியது போல களத்தில் தாம் இந்திய அணியை சாய்க்கிறேன் பாருங்கள் என்ற வகையில் ஃபர்கான் கொண்டாடினார். அவருக்கு 2005இல் உங்களை விட எங்களுடைய தோனி சிறப்பாக கொண்டாடியதாக இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். அதே போல 6 இந்திய விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்ற போலியான செய்தியை ஹரிஷ் ரவூப் சைகையாக செய்து காட்டி இந்தியாவையும் இந்திய ரசிகர்களையும் கிண்டலடித்தார்.
அதற்கு 2022 டி20 உலகக் கோப்பையில் எங்களுடைய விராட் கோலி உங்களை சிக்சர்களாக பொளந்தது மறந்து விட்டதா? என்று அவருக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். மேலும் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலும் உங்களை தோற்கடித்துள்ளோம் என்றும் அவருக்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
ரசிகர்கள் பதிலடி:
இந்நிலையில் பாகிஸ்தான் மகளிரணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அத்தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் தங்களது சொந்த மண்ணில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்து மண்ணைக் கவ்வியது. இருப்பினும் கடைசி போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய அஷ்வின் அடுத்ததாக விளையாட இருக்கும் 2 தொடர்கள் – விவரம் இதோ
அந்தப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சானா 6 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹரிஷ் ரவூப் போலவே முகம் நிறைய சிரிப்புடன் சைகை செய்து காட்டி இந்தியாவை கிண்டலடித்தார். மேலும் 6 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது போல இன்று பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதாக ஆட்டநாயகி நஷ்ரா சந்து 2 வெவ்வேறு சைகையால் கிண்டலடித்துள்ளார். அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் நீங்கள் எல்லாம் கிரிக்கெட்டில் எப்போதுமே முன்னேறப் போவதில்லை பதிலடி கொடுக்கின்றனர்.



