10 வருஷம் ஆச்சு. விடாமல் துரத்தும் விதி. பாகிஸ்தான் அணிக்கு இப்படி ஒரு சோதனையா ? – விவரம் இதோ

- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்து தற்போது 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாட திட்டமிடப்பட்டது. அதன் பிறகு பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி இன்று முதல் ஒரு நாள் போட்டியில் விளையாட இருந்த நிலையில் டாஸ் போடாமலேயே போட்டி ரத்து செய்யப்பட்டது.

Rain

- Advertisement -

இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டுச்சென்றனர். இதற்கு முக்கிய காரணம் யாதெனில் 2009ஆம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் நாட்டில் இதுவரை 10 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகள் நடக்கவே இல்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து இன்று நடைபெறவிருந்த நிலையில் ஒருநாள் போட்டி ரத்தானது ரசிகர்களையும் மிக அதிகமாக பாதித்தது.

ஏனெனில் 2009ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தீவிரவாதிகளால் வீரர்கள் சென்ற வாகனம் தாக்கப்பட்டது. இதையடுத்து எந்த ஒரு அணியும் பாகிஸ்தான் செல்ல தயாராக இல்லை. எனவே பாகிஸ்தான் நாட்டில் எந்த ஒரு அணியும் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆண்டுகளாக பங்கேற்கவில்லை.

Pak

தற்போதுதான் இலங்கை அணி அனைத்திற்கும் சம்பந்தப்பட்டு அங்கு சென்றது. இந்நிலையில் இந்த போட்டி மழையால் நின்றதால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லையே அவர்களின் விதி அவர்களை துரத்துகிறது என்று ரசிகர்கள் தங்களது கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement