கொரோனா முடிஞ்சி நடைபெற இருக்கும் முதல் கிரிக்கெட் இதுதானாம் – ரசிகர்கள் ஹேப்பி

Cup

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்குச் சென்று வரும் ஆகஸ்ட் மாதம் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.

Pak-1

இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் ஜூன் மாதத்திலிருந்து கிரிக்கெட் போட்டிகள் தொடங்கலாம் என்று அந்த அரசாங்கம் ஆணையிட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது.

இதன் காரணமாக இரண்டு வகையான அணிகளையும் சேர்த்து மொத்தம் 25 வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்துக்கு அனுப்ப உள்ளது. இந்த தொடர் திட்டமிட்டபடி கண்டிப்பாக நடைபெறும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. முன்னதாக ஒரு மாதத்திற்கு முன்னர் வீரர் இங்கிலாந்திற்கு செல்ல வேண்டும்.

அவர்கள் இரண்டு வாரம் தனிமைப் படுத்தப்பட வேண்டும். டெஸ்ட் மற்றும் டி20 என இரண்டு போட்டிகளிலும் பங்கு வெறும் 25 வீரர்கள் ஒரே அடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். போட்டிகள் அனைத்தும் மான்செஸ்டர் மற்றும் சவுத்தம்டன் ஆகிய இரண்டு நகரில் மட்டும் நடைபெறும் இது போன்ற பல விஷயங்கள் அரங்கேற இருக்கின்றன.

- Advertisement -

இங்கிலாந்தின் கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பினால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கொரோனாவிற்கு பிறகு நடைபெற உள்ள முதல் தொடராக இது அமையவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.