பாகிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி ராவில்பிண்டி நகரில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 448-6 ரன்கள் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
அப்துல்லா ஷபிக் 2, கேப்டன் சான் மசூத் 6, முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 0 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 16-3 என ஆரம்பத்திலேயே தடுமாறி அந்த அணிக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய முகமது ரிஸ்வான் சதமடித்து 171* ரன்களும் சௌட் ஷாக்கீல் 141 ரன்களும் குவித்து அசத்தினார்கள்.
திருப்பி கொடுக்கும் வங்கதேசம்:
வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சோரிபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் முகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்வதற்கு களமிறங்கிய வங்கதேசத்துக்கு ஜாகிர் ஹசன் 12, கேப்டன் சாந்தோ 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் சத்மான் இஸ்லாம் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த மோனிமூல் ஹைக் நேர்த்தியாக விளையாடி அரை சதமடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல மறுபுறம் அரை சதமடித்து அசத்திய சாத்மன் இஸ்லாம் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்களில் முகமது அலி வேகத்தில் போல்டானார். அடுத்ததாக வந்த சாகிப் அல் ஹசன் 15 ரன்களில் நடையை கட்டினார்.
தவறாகும் முடிவு:
இருப்பினும் அடுத்ததாக லிட்டன் தாஸ் மற்றும் முஸ்பிகர் ரஹீம் ஆகியோர் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் பவுலர்களுக்கு சவாலை கொடுத்தனர். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடும் அந்த ஜோடியில் இருவருமே அரை சதமடித்ததால் 3வது நாள் முடிவில் வங்கதேசம் 316-5 ரன்கள் குவித்துள்ளது. தற்சமயத்தில் 132 ரன்கள் பின்தங்கியுள்ள அந்த அணிக்கு களத்தில் லிட்டன் தாஸ் 52*, ரஹீம் 55* ரன்களுடன் உள்ளனர்.
மறுபுறம் 500 ரன்கள் கூட அடிக்காமல் தைரியமாக டிக்ளேர் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா போன்ற பவுலர்கள் இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக வங்கதேசம் 300 ரன்கள் அடிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் பவுலர்கள் சொந்த மண்ணில் திணறல் பந்து வீசி செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஷாகிப் அல் ஹசன் மீது பாய்ந்த வழக்கு.. 147 கொண்ட குழுவில் 28 ஆவது குற்றவாளியாக அவரது பெயரும் சேர்ப்பு – என்ன நடந்தது?
ஆனால் வங்கதேசத்திற்கு லிட்டன் தாஸ், ரஹீம் அடுத்ததாக மெஹந்தி ஹசன் போன்ற 3 அனுபவமிக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதனால் வங்கதேசம் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றால் அதற்கு பாகிஸ்தான் தைரியமாக முன்கூட்டியே டிக்ளேர் செய்த முடிவு தவறாகி முக்கிய காரணமாகும் சூழல் வாய்ப்புள்ளது.



