
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஆட்டத்தை துவங்கிய பாகிஸ்தானுக்கு ஃபர்கான் மற்றும் பகார் ஜாமான் ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினர்.
கடந்த போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்போட்டியில் இந்தியாவை வெளுத்து வாங்கிய அந்த ஜோடி 9 ஓவரில் 84 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தது. அப்போது அரை சதமடித்த ஃபர்கானை 57 (38) ரன்களில் வருண் சக்கரவர்த்தி அவுட்டாக்கினார். அடுத்து வந்து அதிரடி காட்ட நினைத்த சாய்ம் ஆயுப் 14 (11) ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார்.
அடுத்து வந்த முகமது ஹாரிஸ் 2 பந்தில் அக்சர் பட்டேல் 14 சுழலில் டக் அவுட்டான நிலையில் மறுபுறம் சவாலைக் கொடுத்த ஃபகார் ஜமான் 46 (35) ரன்னில் சக்கரவர்த்தி சுழலில் பெவிலியன் திரும்பினார். போதாகுறைக்கு அடுத்து வந்த ஹுசைன் தாலத் 1 ரன்னில் அக்சர் பட்டேல் சுழலில் விழுந்தார்.
அப்போது பொறுப்புடன் விளையாட வேண்டிய கேப்டன் சல்மான் ஆகாவை 8 ரன்னில் காலி செய்த குல்தீப் யாதவ் அடுத்ததாக வந்த சாகின் அப்ரிடி ஃபகிம் அஷ்ரப் ஆகியோரை அடுத்தடுத்து டக் அவுட்டாக்கினார். அந்த வகையில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை எடுத்து அவர் பாகிஸ்தானை தெறிக்க விட்டார் என்றே சொல்லலாம். அடுத்த ஓவரிலேயே ஹரிஷ் ரவூபை 6 (4) ரன்னில் ஜஸ்ப்ரித் பும்ரா கிளீன் போல்ட்டாக்கினார்.
அப்போது விமானம் கீழே விழுந்து நொறுங்குவது போல அவருக்கு முன் கொண்டாடிய பும்ரா தக்க பதிலடி கொடுத்தார். அதாவது ஆபரேஷன் சிந்தூரில் 6 இந்திய விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்ற போலியான கருத்தை சூப்பர் 4 சுற்று போட்டியில் சைகையால் செய்து காட்டிய ஹரிஷ் ரவூப் இந்தியாவையும் இந்திய ரசிகர்களையும் கலாய்தார். அதற்கு இன்று ஜஸ்ப்ரித் பும்ரா மாஸ் பதிலடி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: 9 வருஷம் கழிச்சி இந்திய அணியில் எனக்கு கிடைச்ச இந்த புது ரோல் பிடிச்சிருக்கு – ஜஸ்ப்ரீத் பும்ரா மகிழ்ச்சி
இறுதியில் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு சுருட்டிய இந்தியாவுக்கு குல்தீப் யாதவ் 4, அக்சர் பட்டேல் 2, வருண் சக்கரவர்த்தி 2, ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். குறிப்பாக 12.4 ஓவரில் 113/1 என்ற வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தானை 146க்கு சுருட்டிய இந்தியா மாஸ் கம்பேக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து ஆசியக் கோப்பையை வெல்வதற்காக இந்தியா சேசிங் செய்து வருகிறது.