எதிரணி வீரராக இருந்தாலும் டேவிட் வார்னருக்கு மரியாதை செய்த பாக் வீரர்கள் – களமிறங்கும் முன் வார்னர் செய்த செயல்

Warner
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி துவக்க வீரரான டேவிட் வார்னர் கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 111 போட்டிகளில் விளையாடி 8695 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 13 ஆண்டு காலம் பயணித்த டேவிட் வார்னரின் கரியர் ஜனவரி 3-ஆம் தேதி துவங்கிய பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி போட்டியுடன் முடிவுக்கு வரவுள்ளது.

ஆம், தற்போது 37 வயதை எட்டியுள்ள டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்த பாகிஸ்தான் தொடருடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்தார். அதோடு சிட்னியில் நடைபெறும் இந்த கடைசி போட்டியோடு வெளியேறவுள்ள அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக டேவிட் வார்னர் விளையாடப் போகும் இந்த கடைசி போட்டிக்கான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் இன்று ஜனவரி 3ஆம் தேதி துவங்கிய இந்த கடைசி போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதல் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது தங்கள் முதல் இன்னிங்சில் 313 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாட துவங்கியது. அந்த வகையில் இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு ஓவர் முடிவில் 6 ரன்களை குவித்தது.

- Advertisement -

இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் டேவிட் வார்னர் 6 ரன்களுடனும், கவாஜா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இன்றைய கடைசி போட்டியின் போது டேவிட் வார்னர் களமிறங்கும் முன்னர் சிட்னி மைதானத்தில் பொறிக்கப்பட்டுள்ள தனது நண்பர் பில் ஹுகஸ்சின் கற்சிலையை தொட்டு வணங்கியபடி களத்திற்குள் புகுந்தார். அவரது இந்த செயல் ரசிகர்களை நெகிழ வைத்தது.

இதையும் படிங்க : 11 பந்தில் 0 ரன்னுக்கு 6 விக்கெட்.. போராடிய கிங் கோலி.. சொதப்பிய இந்தியா.. 2014க்குப்பின் பரிதாப சாதனை

அதோடு மைதானத்திற்குள் அவர் நுழையும்போது எதிரணி வீரர்களாக இருந்தாலும் பாகிஸ்தானின் வீரர்கள் அனைவரும் அணிவகுத்து நின்று “கார்டு ஆப் ஹானர்” மரியாதையை அவருக்கு வழங்கினர். இந்த ஒரு சில நிகழ்வுகள் போட்டியின் முதல் நாள் அன்று ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement