கொரோனா பாசிட்டிவ் என்று உறுதிசெய்யப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் – குணமடைய பிராத்திக்குமாறும் வேண்டுகோள்

Pak-1
- Advertisement -

உலகம் முழுவதும் பெருகிவரும் கொரோனா வைரஸால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சில கிரிக்கெட் வீரர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அதன்படி ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பதாக மஜீத் ஹக் (ஸ்காட்லாந்து வீரர்), ஜாபர் சர்பராஸ் (பாகிஸ்தான்) மற்றும் சோலோ ந்கவேணி (தென்னாப்பிரிக்கா) ஆகியோருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கண்டறியப்பட்டது.

Corona-1

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பாகிஸ்தான் வீரருக்கு கொரோனவைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நான்காவது கிரிக்கெட் வீரராக தவுபிக் உமர் பார்க்கப்படுகிறார். பாகிஸ்தான் அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2006ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரை அணியில் இடம் பிடிக்கவில்லை.

இருப்பினும் 2001ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் முக்கிய ஆட்டக்காரராக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக இவர் விளையாடி உள்ளார். தவுபிக் உமர் கடைசியாக 2014ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். அதன் பின்னர் அணியில் இடம் கிடைக்காத காரணத்தினால் ஓய்வுபெற்ற அவர் தொடர்ந்து கிரிக்கெட் குறித்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

taufeeq

இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சில நாட்களுக்கு முன் காய்ச்சல் அறிகுறி ஏற்பட்ட அவர் பரிசோதனை செய்துள்ளார். அதில் அப்போது அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் : நேற்று கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

Taufeeq 1

இதனால் நான் என்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டேன். எனக்கு தற்போது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். இருப்பினும் எனக்கு கடுமையான அறிகுறிகள் இல்லை. நான் விரைவில் குணமடைய வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement