அணியின் ரூல்ஸ்க்கு பயந்து மனைவியை ஓட்டல் அறையின் அலமாரியில் மறைத்து வைத்த பாக் வீரர் – சுவாரசிய தகவல் இதோ

Mushtaq
- Advertisement -

பாகிஸ்தான் உருவாக்கிய மிக சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் சக்லைன் முஷ்தாக்கும் ஒருவர். இவர்தான் தற்போது பிரபலமாக பயன்படுத்தப்படும் தூஸ்ரா வகை சுழற்பந்து வீச்சை கண்டுபிடித்தவர். தற்போது உலகின் பல சிறந்த அணிகளுக்கு சுழற் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார்.

Mushtaq-3

- Advertisement -

இவர் தற்போது திருமணமான புதிதில் தான் செய்த வேடிக்கையான ஒரு செயலைப் பற்றி வெளியே கூறியுள்ளார். இவருக்கு 1998 ஆம் ஆண்டு திருமணமானது. அவரது மனைவி லண்டனைச் சேர்ந்தவர் அங்கு தான் வசித்து வந்தார். ஒரு வருடமாக மனைவியை பிரியாமல் காதல் ததும்ப ததும்ப ஒட்டி உறவாடி கொண்டிருந்தார் சக்லைன் முஷ்தாக்.

இதன் காரணமாக தினமும் பயிற்சி முடித்து விட்டு அவரை சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். பாகிஸ்தான் அணி அப்போது பல்வேறு சட்டங்களை போட்டு இருந்தது. 1999 ஆம் ஆண்டு இலங்கை இங்கிலாந்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு உலக கோப்பை தொடருக்கு சென்றது.

Mushtaq

அப்போது வீரர்களின் குடும்பத்தினரையும் மனைவியையும் ஹோட்டல் அறைக்கு அழைத்து வரக்கூடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருந்தது. ஆனால் சக்லைன் முஷ்தாக்கால் அவரது மனைவியை பிரிந்து இருக்க முடியவில்லை. இதன் காரணமாக அவரது மனைவி ஹோட்டல் அறையில் அலமாரியில் மறைத்து வைத்துள்ளார்.

- Advertisement -

அப்போது வீரர்கள் மற்றும் மேலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அவ்வப்போது வீரர்களின் அறையை சோதனை செய்ய வருவார்கள். அப்போதெல்லாம் அவரது மனைவியை அலமாரியில் மறைத்து வைத்துள்ளார் சக்லைன் முஷ்தாக். ஒரு கட்டத்தில் அசார் முகமது மற்றும் யூசுப் ஆகிய இருவருக்கும் சந்தேகம் வலுக்க இருவரும் சக்லைன் முஷ்தாக்கை கட்டாயப்படுத்தி கேட்டுள்ளனர்.

Mushtaq 2

அதன் பின்னர்தான் மனைவியை அலமாரியில் மறைத்து வைத்திருப்பதாகக் கூறி உள்ளார் சக்லைன் முஷ்தாக் .இந்த சம்பவத்தை 20 வருடங்கள் கழித்து தற்போது சிரிப்பாய் சிரிக்கும்படி கூறி நெகிழ்ந்துள்ளார்கள் சக்லைன் முஷ்தாக்.

Advertisement