தோனிக்கு கருணைகாட்டாதீர்கள். அவரை அணியில் இருந்து உடனே நீக்குங்கள் – பாக் அமைச்சர் சர்ச்சை பதிவு

Dhoni

இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணி பற்றி பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் மீதும், கேப்டன் கோலியின் மீதும் விமர்சனங்கள் மெல்ல மெல்ல எழதுவங்கியுள்ளன.

Kohli

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் தகவல் தொடர்பு அதிகாரி ஒருவர் தோனி குறித்து ஒரு சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதனை பாகிஸ்தானின் அமைச்சர் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அந்த சர்ச்சையான ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.

அந்த ட்வீட்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் தோனிக்கு கருணையற்ற நீக்கம் கண்டிப்பாக தேவை. இந்திய அணி தோனிக்கு கருணை காட்டக்கூடாது. அவரை உடனடியாக நீக்க வேண்டும் அதற்கு காரணம் யாதெனில் ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் ஃபிக்ஸிங் மற்றும் அரசியலை தோனியை புகுத்துகிறார் என்று கூறப்பட்டு அந்த ட்வீட் உள்ளது.

இந்த ட்விட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ட்விட்டை கண்ட இந்திய ரசிகர்கள் அவரை தொடர்ந்து வசை பாடிய வண்ணம் உள்ளனர். தோனிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் நாங்கள் இருக்கும் வரை தோனியை எதுவும் செய்ய முடியாது என்றும் கமெண்ட்டுகள் அவருக்கு எதிராக பறக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.