எங்களை கேவலப்படுத்தாதீங்க நாஸ்தி ஆய்டுவீங்க ஐ.சி.சி க்கு மிரட்டல் விடுத்த – பாகிஸ்தான் ரசிகர்கள்

Pakistan-Fans
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்து தற்போது 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாட திட்டமிடப்பட்டது. அதன் பிறகு பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி முதல் ஒரு நாள் போட்டியில் விளையாட இருந்த நிலையில் டாஸ் போடாமலேயே போட்டி ரத்து செய்யப்பட்டது.

Pak

- Advertisement -

2009ஆம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் நாட்டில் இதுவரை 10 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகள் நடக்கவே இல்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து ஒருநாள் போட்டி நடைபெறவிருந்த நிலையில் ஒருநாள் போட்டி ரத்தானது ரசிகர்களையும் மிக அதிகமாக பாதித்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியும் கனமழை காரணமாக இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியான நிலையில் ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கேலி செய்யும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கனமழை காரணமாக இரண்டு நாள் போட்டி தள்ளிவைக்கப்பட்டது என்று எப்போதாவது கேள்விப்பட்டது உண்டா என்று ஐ.சி.சி பதிவிட்டிருந்தது.

இதனை கண்ட பாகிஸ்தான் ரசிகர்கள் நீங்கள் கேலி செய்யும் விதம் எங்களுக்கு வருத்தமாக உள்ளது. மேலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டே பாகிஸ்தான் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது. இது போன்று உங்கள் செயல்பாடு தொடர்ந்தால் உங்களையும் நாங்கள் விட்டு வைக்க மாட்டோம் என்பது போன்று ஐசிசிக்கு நேரடியாக பாகிஸ்தான் ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement