IND vs ENG : கடவுளே இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா ஜெயிக்கனும். பாக் ரசிகர்கள் திடீர் பாசம்

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரை

Pak-fans
- Advertisement -

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரையிறுதிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

india

- Advertisement -

அடுத்ததாக இந்திய அணி வரும் 30ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது 2 அணிகளுக்குமே இந்த போட்டியை முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று கருதப்படும் இந்த இரண்டு அணியும் மோதுவதால் இந்த போட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்த வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். மேலும் இந்தியாவை ஆதரித்தும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன் காரணம் யாதெனில் இந்தியாவுடனான போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஏனெனில் அடுத்து பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுகிறது.

Pakistan-Fans

இந்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் எனவே இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் தோற்க பாகிஸ்தான் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். மேலும் இங்கிலாந்து அணி இந்தியாவிடனும் மற்றொரு போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோற்றால் அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு கலைந்துவிடும் என்பதாலும் பாகிஸ்தான் ரசிகர்கள் இவ்வாறு வேண்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement