பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியிடம் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் பரிதாபமாக தோல்வி அடைந்து தொடரை இழந்தது.
இந்த தொடரின் நான்காவது டி20 போட்டியானது நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த வேளையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஷதாப் கானை பொதுவெளியில் சந்தித்த ரசிகை ஒருவர் அவரது மோசமான பார்ம் குறித்து வெளிப்படையாக கேள்வி எழுப்பினார்.
மேலும் ஷதாப் கானை நிற்க வைத்து அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அந்த பெண் ரசிகை தொடர்ச்சியாக அவரது பார்ம் குறித்து கேள்வியை எழுப்பியது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ குறித்து பல்வேறு ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடரின் போது பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டது மட்டும் இன்றி அதிகளவு சிக்ஸர்களையும் அவரது பவுலிங் விட்டுக் கொடுத்தார். அதனால் அவரது இந்த மோசமான பவுலிங் குறித்து அந்த பெண் ரசிகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்து டி20 தொடர் முடிந்ததும் பொது வெளியில் ரசிகர்களை சந்தித்த பாகிஸ்தான் வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது ஷதாப் கானிடம் வந்த ரசிகை ஒருவர் அவரை பார்த்து : நீங்கள் ஏன் இவ்வளவு சிக்ஸர்களை விட்டுக் கொடுக்கிறீர்கள்? நீங்கள் மீண்டும் பார்மிற்கு திரும்பி வந்து அதிக விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க : பிறந்தநாள் அன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை மொத்தமாக கலங்கவைத்த தினேஷ் கார்த்திக் – விவரம் இதோ
மேலும் இந்த மோசமான ஃபார்மிற்கு காரணம் என்ன? நீங்கள் எப்போது பார்முக்கு திரும்புவீர்கள்? என ஷதாப் கானிடம் அந்த பெண் கேள்வி எழுப்பினார். அதனை கவனித்த ஷதாப் கான் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தபடியே புன்னகைத்தார். அவரது இந்த உரையாடல் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.



