- Advertisement -
உலக கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு உண்மைக்கு காரணம் இதுதான்.. சாக்கு போக்கு சொல்ல விரும்பல – பாக் கோச் அதிரடி

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இந்த ஆண்டு 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கோப்பையை கைப்பற்றும் என்று கூட பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் என்ன? : பாகிஸ்தான் பயிற்சியாளர்

ஆனால் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் இரண்டு லீக் ஆட்டங்களிலும் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியானது அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமல் லீக் சுற்றோடு இந்த தொடரில் இருந்து வெளியேறியது. பாகிஸ்தான் அணி பெற்ற இந்த தோல்வி அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பிரபலங்கள் பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது.

- Advertisement -

அதோடு இந்து தோல்வி அவர்களுக்கு பெரிய அளவில் விமர்சனம் எழவும் காரணமாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி இந்த தொடரில் தோல்வி அடைந்ததற்கு இந்தியா காரணம் இல்லை என்றும் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவதால் அவர்கள் வெற்றி பெறவில்லை என்றும் வெளிப்படையான உண்மையை பாகிஸ்தான் பயிற்சியாளர் ஆகிப் ஜாவித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரே மைதானத்தில் விளையாடுகின்றனர். ஒரு இடத்தில் இருந்து அங்கேயே போட்டிகளை விளையாடுவது நன்மை தரக்கூடியது தான். ஆனால் அதனால் தொடர்ந்து வெற்றி பெற முடியும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அந்த போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது. அதன் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

நாம் தோல்வியை சந்திக்கும்போது எப்பொழுதும் சாக்கு போக்கு சொல்லக்கூடாது. ஒரு அணி சிறப்பாக செயல்பட்டால் அவர்களை பாராட்டுகிறோம். அதேவேளையில் தோல்வியடையும்போது விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். தற்போது பாகிஸ்தான அணி அடைந்துள்ள தோல்வியால் வீரர்கள் மிகவும் காயமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : நெட் ப்ராக்டீஸ்ல அவர் பந்தை மட்டும் எதிர்த்து ஆடவே மாட்டேன்.. இந்திய பவுலரின் மீதான பயம் குறித்து – கே.எல் ராகுல் வெளிப்படை

பாகிஸ்தான் அணியை சிறப்பாக மாற்ற எங்களால் முடித்த அனைத்தையும் செய்வோம். ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் நிச்சயம் ஒரு அணிக்கு அனுபவம் என்பது மிகவும் அவசியம். அந்த வகையில் இந்திய அணி வீரர்களிடம் இருக்கும் அனுபவம் தற்போது பாகிஸ்தான் அணியில் இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணம் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -