இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் துவக்க வீரர், டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டர் என எந்த இடத்தில் தனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும் அதனை அற்புதமாக பயன்படுத்தி ரன்களை குவித்து வருவதால் இந்திய ஒருநாள் அணியில் முதன்மை வீரராக இடம் பிடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். டி20 போட்டிகளுக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நட்சத்திர வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
கே.எல் ராகுல் பயப்படும் இந்திய பந்துவீச்சாளர் :
அதிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி வெளியேறிய பின்னர் விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்ப வந்த அவர் தனது பணியை மிகச் சிறப்பாக செய்ததால் 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரிலிருந்து தொடர்ச்சியாக இந்திய ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக இருந்து வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இடம் பிடித்து விளையாடி வரும் அவரிடம் சில சுவாரசியமான கேள்விகள் ஒரு கலந்துரையாடலில் கேட்கப்பட்டன. அதற்கு அவர் அளித்த பதில் குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் கேல் ராகுலிடம் எந்த மூன்று வீரர்களை டி20 பிளேயிங் லெவனில் சேர்ப்பீர்கள்? என்று கேட்கப்பட்ட போது அவர் :
பும்ரா, சூரியகுமார் யாதவ் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகியோரை தனது டி20 பிளேயிங் லெவனில் சேர்ப்பேன் என்று தெரிவித்தார். அதோடு தான் விளையாடியதிலேயே பேட்டிங் செய்ய கடினமான மைதானமாக சென்னை சேப்பாக்கம் மைதானம் இருப்பதாகவும், 2021 இல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அடித்த சதம் தான் தனக்கு மிகவும் பிடித்த சதம் என்றும் கூறியிருக்கிறார்.
அதேபோன்று தனக்கு இந்திய அளவில் கஷ்டத்தை கொடுக்கும் பந்துவீச்சாளர் குறித்தும், சர்வதேச வீரர்களில் கஷ்டத்தை கொடுக்கும் பந்துவீச்சாளர்கள் குறித்தும் சில கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அந்த வகையில் நெட் ப்ராக்டீஸ் இல் எந்த இந்திய பவுலருக்கு எதிராக விளையாட விரும்ப மாட்டீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் : முகமது ஷமியின் பந்துவீச்சை நெட் பிராக்டீஸில் கூட எதிர்த்து விளையாட விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கோலியும் ஃபார்முக்கு வந்துட்டாரு.. அவர் மட்டும் சதமடிச்சா.. இரக்கமற்ற இந்தியா கோப்பை வெல்லும் ராஜ்புத் பேட்டி
அந்த அளவிற்கு முகமது ஷமி மிகச் சிறப்பாக பந்து வீசுவார் என்பதால் வலைப்பயிற்சியில் கூட அவரது பந்தை கே.எல் ராகுல் விளையாடுவது கிடையாதாம். அதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் ரஷீத் கானுக்கு எதிராகவும் அவர் விளையாட கஷ்டப்பட்டு உள்ளதாகவும் ரசித் கான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



