
நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த இரு அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய வேளையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18 ஓவர்களில் 114 ரன்களை மட்டுமே குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் காரணமாக இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறுகையில் : எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்களை நாங்கள் பெரிதாக நம்பி இருந்தோம். ஆனால் இன்றைய போட்டி எங்களுக்கு அந்த எதிர்பார்த்த முடிவை தரவில்லை. ஒரு சில நாட்களில் இதுபோன்று நடப்பது சகஜம் தான்.
இதையும் படிங்க : சத்தமே இல்லாம இவர் இந்திய அணிக்காக சம்பவம் செய்ஞ்சிட்டு வராரு – இர்பான் பதான் பாராட்டு
ஆனால் எங்களது அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் இழக்கப்போவது கிடையாது. கடந்த ஆறு மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வந்த அவர்களுக்கு இம்முறை ஒரு சறுக்கல் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் நாங்கள் அவர்களுக்கு முழு ஆதரவாக இருப்போம் என சல்மான் அலி ஆகா கூறியது குறிப்பிடத்தக்கது.