உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டியானது வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
இந்திய அணியில் இவரை பாராட்டியே ஆக வேண்டும் : இர்பான் பதன்
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது. பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியினை ருசித்தது.
இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 77 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதினை வென்றார். இருந்தாலும் இந்த போட்டியின் போது பின் வரிசையில் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபேவை முன்னாள் வீரரான இர்பான் பதான் பாராட்டி பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நமது அணியில் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் வீரர்களை பற்றிதான் அதிகம் பேசுகிறோம்.
ஆனால் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய இன்னொரு பேட்ஸ்மேன் இருக்கிறார். அவர் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போய்விடுகிறார். ஷிவம் துபே எப்போதுமே சத்தம் இல்லாமல் பெரிய சம்பவங்களை செய்து வருகிறார். ஏற்கனவே 2024 டி20 உலக கோப்பை தொடர், ஆசிய கோப்பை என முக்கியமான தொடர்களில் அவர் வெகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : இந்த வெற்றியை நம் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறேன்.. பாகிஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு பேசிய – சூரியகுமார் யாதவ்
ஷிவம் துபே அதிரடியை ஆரம்பிக்க சிறிது நேரம் பிடிக்கும். ஆனால் அப்படி அவர் விளையாட ஆரம்பித்து விட்டால் சிறப்பான ஒன்றாக இருக்கும். எப்போதுமே நமது அணிக்கு தேவையான ஒரு இன்னிங்ஸை அவர் விளையாடிட்டு தான் சென்றுள்ளார் என இர்பான் பதான் பாராட்டியிருந்தார். அவர் கூறியது போன்றே நேற்றைய போட்டியில் 17 பந்துகளை சந்தித்த ஷிவம் துபே இறுதி நேரத்தில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 27 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



