
ஜிம்பாவே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அத்தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற பாகிஸ்தான் அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி டிசம்பர் ஒன்றாம் தேதி புலவாயோ நகரில் நடைபெற்றது.
இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்த களம் இறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 165-4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உஸ்மான் கான் 39, சாய்ம் ஆயுப் 24, டாயப் தாஹிர் 39*, இர்பான் கான் 27* ரன்கள் எடுத்தார்கள்.
ஜிம்பாப்வே அணிக்கு ரிச்சர்ட், கேப்டன் சிக்கந்தர் ராசா, மசகட்சா, ரியான் புர்ல் தலா ஒரு விக்கெட் எடுத்தார்கள். பின்னர் 166 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே பிரையன் பெனட் 6, டியோன் மேயர்ஸ் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். ஆனால் மருமணி அதிரடியாக விளையாடி 33 (20) ரன்களும் கேப்டன் சிக்கந்தர் ராசா 39 (28) ரன்களும் எடுத்தார்கள்.
அதனால் 8.2 ஓவரில் 77-2 என்ற வலுவான துவக்கத்தை பெற்ற ஜிம்பாப்வே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் பவுலர்கள் ரியான் புர்ல் 3, கிளைவ் 5 என அடுத்து வந்த வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கினார்கள். அந்த வகையில் மிடில் ஓவரில் சொதப்பிய ஜிம்பாப்வே 15.3 ஓவரில் 108க்கு ஆல் அவுட்டானது.
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக அப்ரார் அகமது 3, சூபியன் முஹிம் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதன் காரணமாக 57 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதனால் ஒருநாள் தொடரை போல இந்த தொடரிலும் 1 – 0* (3) என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 2016ல இருந்து பொறுத்தது போதும்.. இந்தியாவுக்கு 2 வழியையும் பாகிஸ்தான் கட் பண்ணனும்.. கம்ரான் அக்மல்
மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தொடர்ந்து தங்களுடைய வீரத்தை காட்டி ஆதிக்கம் மிகுந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. இந்த போட்டியில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தாயம் தாகிர் ஆட்டநாயகன் விருது வென்றார். இதை எடுத்து இரண்டாவது போட்டியில் வென்று பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஜிம்பாப்வே அணி தயாராக உள்ளது.