ஸ்மித் விரும்பினால் நான் இதனை செய்ய தயாராக இருக்கிறேன் – டிம் பெயின் பேட்டி

paine

ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வகை கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக ஸ்மித் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக ஓர் ஆண்டு தடைபெற்ற ஸ்மித்தின் கேப்டன்சி பறிபோனது.

Eng-vs-Aus

அதன்பிறகு ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ஆரோன் பின்ச் மற்றும் டெஸ்ட் அணிக்கு டிம் பெயின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்கள். ஸ்மித் இல்லாததால் இந்த நேரத்தில் பெயின் அந்த அணியின் கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்தார். மேலும் அவரது கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் முதன் முறையாக இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை இழந்தது.

பண்ட் கூட அவரின் கேப்டன்ஷிப் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் ஓராண்டு தடை போட்டு பிறகு மீண்டும் அணியில் இணைந்த ஸ்மித் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடியதோடு தர வரிசையில் முதல் இடத்தையும் பிடித்தார். இந்நிலையில் மீண்டும் அவர் கேப்டனாக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வந்தது.

Smith

இந்நிலையில் ஸ்மித் கேப்டனாக ஆவது குறித்து பேசிய பெயின் கூறியதாவது : மீண்டும் ஸ்மித் கேப்டனாக விரும்பினால் அவருக்கு தனது முழு ஆதரவையும் அளிக்க நான் தயாராக இருக்கிறேன் மேலும் நானாக முன்வந்து என்னுடைய கேப்டன்சி ஸ்மித்துக்கு விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக பெயின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -