ஒரு இடதுகை பேட்ஸ்மேனாக இவர்தான் எனக்கு ஒரு ரோல்மாடல் – படிக்கல் ஓபன்டாக்

Padikkal 3

கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியிருக்கும் படிக்கல், சமீபத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களிடம் இருந்து தனிமை படுத்தப்பட்டு இருந்தார். கொரோனா வைரசிலிருந்து தற்பொழுது மீண்டு வந்துள்ள படிக்கல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரருடன் இணைந்து மீண்டும் அணிக்காக விளையாட முழுத் தகுதியுடன் உள்ளார். சமீபத்தில் பேசிய அவர் தனது ரோல் மாடல் குறித்து பேசியுள்ளார்.

padikkal

சிறு வயதிலிருந்தே நான் கவுதம் கம்பீர் விளையாடுவதை பார்த்துதான் நான் வளர்ந்தேன். இந்திய அணியின் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களிடமிருந்து ஒவ்வொரு விஷயங்களை நம்மால் கற்றுக் கொள்ள இயலும். எனக்கு பல வகையில் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஒரு சில விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். அதில் குறிப்பாக கௌதம் கம்பீர் எனது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

அவரது பேட்டிங் எனக்கு மிகமிகப் பிடிக்கும். அவர் பேட்டிங்கை நான் நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருப்பேன்.அவர்தான் எனக்கு ரோல் மாடல் என்று கவுதம் கம்பீர் பற்றி மிகப்பெரிய வார்த்தைகளை படிக்கல் அண்மையில் கூறியுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருந்த படிக்கல், தற்பொழுது அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் ஆர்சிபி அணிக்காக விளையாட தயாராக இருக்கிறார்.

gambhir1

சென்ற வருடம் ஆர்சிபி அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 473 ரன்கள் குவித்து மிகப்பெரிய தாக்கத்தை ஆர்சி ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தினார். இந்த ஆண்டு மீண்டும் களமிறங்கவுள்ள படிக்கல், மிகப்பெரிய பார்மில் உள்ளார் என்று நாம் கூற வேண்டும். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 737 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

அந்தத் தொடர் முழுவதும் சேர்த்து இவரது ஆவரேஜ் 147.40 ஆகும். எனவே இந்த ஆண்டும் படிக்கல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஆர்சிபி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.