மும்பை அணிக்கெதிராக நான் அரைசதம் அடித்த போது எனக்கு இவர் அனுப்பிய மெசேஜ் ரொம்ப ஸ்பெஷல் – படிக்கல் பகிர்வு

padikkal

இந்த வருட ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலர் சிறப்பாக விளையாடினார்கள். வாஷிங்டன் சுந்தர் தங்கராசு நடராஜன், முருகன் அஸ்வின், வருன் சக்ரவர்த்தி, ரியான் பராக் போன்ற பல வீரர்களும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினார்கள். பெங்களூர் அணிக்காக தொடக்க வீரராக விளையாடியவர் தேவ்தத் இடதுகை ஆட்டக்காரர்.

Padikkal 3

அந்த அணிக்காக விளையாடி இந்த வருடம் 15 போட்டிகளில் 473 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் அவர் பல சாதனைகளையும் படைத்துவிட்டார். மேலும் வெகு சீக்கிரத்தில் இந்திய அணிக்காக ஆடப் போவதாக அவர் தெரிவித்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இவர் தான் இந்தியாவின் அடுத்த யுவராஜ் சிங் என்ற பெயரும் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் இவரை அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார். தேவ்தத் படிக்கல் அவர் கூறுகையில்…

விராட் கோலி ஏபி டிவிலியர்ஸ் போன்ற மாடர்ன்- டே ஜாம்பவான் பேட்ஸ்மேன்களுடன் விளையாடியது மிகச் சிறப்பானது. விராட் கோலியுடன் அதிகம் விளையாடி இருக்கிறேன். களத்தில் அவருக்கு எதிர் முனையில் நின்று நிறைய ஆடி இருக்கிறேன். ஆனால் ஏபி டிவில்லியர்ஸ் உடன் சேர்ந்து அதிகம் ஆடாதது எனக்கு வருத்தத்தை அளித்திருக்கிறது.

abd 1

மும்பை அணிக்காக அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தபோது ஏபி டி வில்லியர்ஸ் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி என்னை பாராட்டினார். நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள் தொடர்ந்து இப்படியே விளையாடுங்கள் உங்களது ஆட்டத்தை அனுபவித்து ஆடுங்கள் எப்போதும் ரன் அடிக்க வேண்டுமென்ற வேட்கையுடன் இருங்கள். என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் இவ்வாறு தெரிவித்துள்ளார் தேவதத் படிக்கல்.

- Advertisement -

padikkal

இவரது ஆட்டத்தினை ஏற்கனவே பாராட்டி பேசியிருந்த பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி நிச்சயம் இவர் விரைவில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடுவார் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.