எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் ஐபிஎல் தொடர் இளம் வீரர்களின் கோட்டையாக மாறிவிட்டது. தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் இளைஞர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், மும்பை அணியின் இஷான் கிஷான், ஹைதராபாத் அணியில் தங்கராசு நடராஜன் என பல இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சர்வதேச அளவில் தங்களது கவனத்தை திருப்பி வருகின்றனர்.
இதில் பெங்களூர் அணியின் தொடக்க வீரராக தேவதத் படிக்கல் என்ற ஒரு இளம் வீரர் ஆடிக் கொண்டிருக்கிறார். ஐந்து போட்டிகளில் ஆடி 171 ரன்கள் நடித்திருக்கிறார். இவரது ஆட்டம் முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை போலவே இருப்பதாக பல விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
விராட் கோலியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் அற்புதமாக ஆடி ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று கொடுத்தார். இவர் இதுகுறித்து அவர் பேசுகையில்… வீராட் கோலியுடன் பேட்டிங் செய்வது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நான் இளம் வயது முதல் அவரை டிவியில் பார்த்து வருகிறேன். இப்போது அவருடன் சேர்ந்து விளையாடுவதை நிஜம் தானா ? இல்லை கனவா ? என்று ஒரு உணர்வை கொடுத்து விட்டது.
நான் களைப்படைந்து விட்டேன் .அவர் தொடர்ந்து என்னை ஊக்குவித்து கொண்டே இருந்தார். வெற்றி பெறும்வரை நிற்க வேண்டும் என்று என்னிடம் கூறிக்கொண்டே இருந்தார். அவர் அப்படித்தான் பேட்டிங் செய்வார். அதனால் அதையே எனக்கும் கூறினார். 20 ஓவர் முழுவதும் ஆடுகளத்தில் நின்று விட்டேன் மீண்டும் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது என்று கூறியுள்ளார் அவர்.