நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் தேவ்தத் படிக்கல் படைத்த மாபெரும் சாதனை

Padikkal

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல்லின் 16வது லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. பின்பு களமிறங்கிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

padikkal

இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சை ஆடிய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் சதமடித்து அசத்தினார். இது ஐபிஎல் தொடர்களில் படிக்கல் அடிக்கும் முதலாவது சதம் ஆகும். பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து ஓப்பனிங் ஆடிய தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இப்போட்டியில் தான் எதிர்கொண்ட 51வது பந்தில் சதம் அடித்த தேவ்தத் படிக்கல் ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதன்படி ஐ.பி.எல் அதிவேக சதமடித்த அன்கேப்டு ப்ளேயர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னதாக 2011ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடிய பஞ்சாப் வீரர் பால் வால்தட்டி 52 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்து வந்தது.

padikkal 2

அச்சாதனையை நேற்று 51 பந்துகளில் சதமடித்ததன் மூலமாக முறியடித்திருக்கிறார் தேவ்தத் படிக்கல். மேலும் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாகமல் ஐபிஎல்லில் சதம் அடிக்கும் நான்காவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்னராக ஷான் மார்ஸ், மனிஷ் பாண்டே, பால் வால்தட்டி இச்சாதனையை செய்திருக்கின்றனர்.

- Advertisement -

padikkal 1

இத்தொடரில் இந்த வெற்றியானது பெங்களூர் அணி பெறும் தொடர்ச்சியான 4வது வெற்றியாகும். ஐபிஎல் தொடர்களில் முதல் நான்கு போட்டிகளிலும் பெங்களூர் அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.