விராட் கோலியுடன் சேர்ந்து ஒரே நாளில் பிறந்தநாளை கொண்டாடிய இந்த அதிகாரி யார் தெரியுமா? – விவரம் இதோ

Paddy-Upton
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள நான்கு ஆட்டங்களில் மூன்று வெற்றிகளை பெற்று கிட்டத்தட்ட அரையிறுதிக்குள் ஒரு காலை வைத்துவிட்டது என்றே கூறலாம். அதனை தொடர்ந்து நாளை நவம்பர் 6-ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட இருக்கும் இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்றால் குரூப் இரண்டில் எட்டு புள்ளிகள் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் மிகச் சிறப்பான வெற்றிகளுக்கு காரணமாக முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமாகன விராட் கோலி திகழ்ந்து வருகிறார். ஏனெனில் இந்த தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிராக விளையாடிய போது நம்ப முடியாத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

அதன் பிறகு நடைபெற்று முடிந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டி, பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டி என இதுவரை விளையாடி உள்ள 4 போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் அரைசதம் அடித்த அவர் மூன்று முறை நாட் அவுட்டாகவும் இருந்து இந்திய அணிக்கு சிறப்பான வெற்றிகளை தேடித் தந்துள்ளார். அதனை தொடர்ந்து இந்த உலகக் கோப்பை தொடரின் தொடர் நாயகனாகவும், இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் விராட் கோலி திகழ்வார் என்று பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நவம்பர் 5-ஆம் தேதி தனது 34 ஆவது பிறந்த நாளை விராட் கோலி அணி வீரர்களுடன் இணைந்து கொண்டாடினார். அவரது இந்த பிறந்த நாளுக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலியின் இந்த பிறந்த நாளில் மற்றொரு ஊழியரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

மேலும் அவர் குறித்த தகவலும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனது. அதன்படி விராட் கோலி உடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடியது வேறு யாரும் கிடையாது. இந்திய அணியின் மனநிலை பயிற்சியாளராக தற்போது பயணித்து வரும் பேடி ஆப்டன் தான். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வீரரான இவர் இன்று தனது 54-வது பிறந்த நாளை விராட் கோலியுடன் சேர்ந்து கொண்டாடினார்.

இதையும் படிங்க : இந்தியா இன்னமும் சரியான டீம செலக்ட் பண்ணல, முதலில் அவருக்கு சான்ஸ் கொடுங்க – ரிக்கி பாண்டிங் கோரிக்கை

இருவருக்கும் ஒரே தினத்தில் பிறந்த நாள் என்பதால் இருவருக்கும் ஒரே நேரத்தில் அணி நிர்வாகத்தின் சார்பாக கேக் வெட்டப்பட்டது. மேலும் இது குறித்த வீடியோவையும் பி.சி.சி.ஐ தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவே தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement