ஓவர் த்ரோ சர்ச்சை குறித்து ஐசிசி விளக்கம். அடடா இந்த விளக்கத்தை கேட்டா நமக்கே சிரிப்பு வரும்.

Stokes
Advertisement

உலகக்கோப்பை இறுதி போட்டியில் எக்கச்சக்க திருப்பு முனைகள். அதோடு சில மிகப்பெரிய குளறுபடிகளும் நடந்ததாக இன்று வரை விமர்ச்சிக்கப்படுகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று ஓவர் த்ரோவ் சர்ச்சை. ஆட்டத்தின் போக்கையே மாற்றியது அந்த ஓவர் த்ரோவ் தான். அதோடு அதற்கு 6 ரன்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்க்கு விதிப்படி 5 ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டும் என்று பலரும் கூறியுள்ளனர்.

ஒருவேளை அந்த ஓவர் த்ரோவிற்கு 5 ரன்கள் கொடுக்கப்பட்டிருந்தால் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அன்றைய போட்டி ட்ராவில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடைபெற்று அதுவும் ட்ராவில் முடிந்தது. அதன் பிறகு பௌண்டரிகளின் எண்ணிக்கைப்படி இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

Stokes 2

இந்த நிலையில் அந்த ஓவர் த்ரோவ் சர்ச்சை குறித்து தற்போது ஐசிசி விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளது என்னவென்றால், ஐசிசி விதிகளின் படி போட்டியில் எந்த ஒரு முடிவையும் களத்தில் உள்ள அம்பயர்களே எடுப்பார்கள். அவர்களின் முடிவை பற்றி விமர்சிப்பது சரியாக இருக்காது என்று கூறியுள்ளார்.ஆனால் அம்பயர்களின் அந்த முடிவை பற்றி கூறியுள்ள சர்வதேச முன்னாள் நடுவர் சைமன் டஃபெல், 5 ரன்கள் கொடுக்கவேண்டிய இடத்தில் 6 ரன்களை கொடுத்தது அம்பயர்களின் தெளிவான குழப்பம் என்று கூறியுள்ளார்.

Advertisement