நடந்து வரும் ஐபிஎல் 11வது சீசனில், கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டுவருகிறார்.நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி சென்னை அணியை பேட் செய்ய வைத்தார்.பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை குவித்தது.

இந்த போட்டியில் முதலில் சென்னை அணி சிறப்பாக தான் விளையாடியது. ஆனால் போக போக கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் சென்னை அணியின் ரன் குவிப்புகளை கட்டுப்படுத்தினர். இதனால் ஒரு கட்டத்தில் 200 ரன்கள் எட்டும் என்று எதிர்பார்க்க பட்ட சென்னை அணி 177 ரன்களை மட்டுமே எடுத்தது.
வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில் “எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர் மேலும் எங்கள் அணியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எங்கள் அணியின் இளம் வீரரான சுப்மன் கில் சில போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் இந்த போட்டியில் நன்றாக விளையாடினார்.அதிலும் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையுடன் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தனர்.இதனால் நாங்கள் எந்த வித தடையுமின்றி எங்கள் அணி வெற்றி பெற்றது” என்று கூறியிருந்தார்.



