ராஞ்சில டெஸ்ட் போட்டி இனிமே நடத்தனும்னா ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கணும் – பி.சி.சி.ஐ புலம்பல்

Ground
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது கிரிக்கெட் போட்டி நாளை ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அது தொடரை பாதிக்காது. ஏற்கனவே இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி உள்ளதால் ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

IND vs RSA

- Advertisement -

இந்நிலையில் தற்போது ராஞ்சி மைதானத்தில் இந்தப் போட்டியை நடத்த வேண்டுமா என்று பிசிசிஐ புலம்பும் அளவிற்கு ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மொத்தம் 39 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட ரஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான மூன்றாவது போட்டியை காண வெறும் 1,500 டிக்கெட்டுகளே இதுவரை விற்றுள்ளன. இதனால் ராஞ்சியில் போட்டி நடத்த ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்ற அளவிற்கு பிசிசிஐ புலம்பி வருகிறது.

எனவே நாளைய போட்டியில் மைதானம் வெறிச்சோடி காணப்படக்கூடாது என்பதற்காகவே 5000 டிக்கெட்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் சார்பாக இலவசமாகவும், 10000 டிக்கெட்டுகளை பள்ளிக் குழந்தைகள் மற்றும் கிளப் மற்றும் அகாடமி என இலவசமாக வழங்கியுள்ளார்கள். அப்போதாவது ஓரளவு மைதானம் முழுமை அடைந்திருக்கும் என்ற காரணத்திற்காக டிக்கெட் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகி ஒருவர் கூறும்போது : அடுத்த முறை இங்கு போட்டியை நடத்த ஒருமுறைக்கு இருமுறை நாங்கள் சிந்திக்க உள்ளோம். ஏனெனில் ஒவ்வொரு முறையும் எங்களால் பி.சி.சி.ஐயிடம் மன்னிப்பு கேட்க முடியாது. மேலும் போட்டியை நடத்த முடியாது என்றும் எங்களால் கூற முடியாது. ஏனெனில் போட்டியை நடத்துவது என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கான பெருமை எனவே நாங்கள் டெஸ்ட் போட்டியை நடத்த விரும்புகிறோம். இருப்பினும் அதற்கான ரசிகர்கள் கூட்டத்தை எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement