சச்சின் டெண்டுல்கர் கூறிய “பேரழிவின் பாதையில் பயணமாகும் ஒருநாள் கிரிக்கெட்”..!

sachinspinn
- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு புது பந்துகளை வீசுவதால் பந்து வீச்சாளர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக சச்சின் டெண்டுல்கர் கூறிய கூறிய கருத்திற்கு முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாக்கர் யூனிஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

sachin-ynis

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஒரு பந்து மட்டும் தான் பயன்படுத்தி வந்தனர். அப்படி ஒரு வேலை பந்து சேதமடைந்தாலோ, தொலைந்தாலோ அந்த பந்திற்கு இணையான பந்தை தான் மீண்டும் போட்டியில் பயன்படுத்துவார்கள். இதற்கு முக்கிய காரணமே புதிய பந்தை பயன்படுதின்னால் போட்டியில் சில மாற்றங்கள் நிகழவும் வாய்ப்புள்ளது.

உதாரணமாக புதிய பந்து பள பளப்பாக இருக்கும் என்பதால் வேக பந்து வீச்சர்களுக்கு ஸ்விங் வீச மிகவும் எளிதாக இருக்காது, ஆனால் பந்து தேய தேய அது வேக பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்யவும், சூழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும் மாறி விடும். தேய்ந்த பந்தில் பந்து வீச்சாளர்களுக்கு நல்ல பிடிமானம் கிடைத்து பந்து மேலும் சுழல எதுவாக இருக்கும்.

ballswing

ஆனால், கடந்த சில போட்டிகளாக ஒரு போட்டியில் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்தி வருகிறன்றனர். இது குறித்து சச்சின் சமீபத்தில் தனது பதிவை பதிவிட்டிருந்தார். அதில் ‘ ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்துவது, பேரழிவிற்கு சிறந்த விருந்தாக அமைந்துள்ளது . புதிய பந்து தேய்வதற்கு நேரம் எடுக்கும்.அதற்குள் அடுத்த இன்னிங்ஸிற்கு புதிய பந்து பயன்படுத்துவதால், நீண்டகாலமாக ரிவர்ஸ் ஸ்விங்கையே பார்க்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement