IND vs NZ : எக்ஸ்ட்ராவா 10 ரன் கெடச்சும் இப்படியா ஆடுவீங்க. இந்திய ஓப்பனர்கள் மீது – எழுந்த குற்றச்சாட்டு

Ishan Kishan and Pant
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று மவுண்ட் மாங்கனியில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக சூரியகுமார் யாதவ் அதிகபட்சமாக ஆட்டம் இழக்காமல் 111 ரன்களை குவித்து அசத்தினார்.

Suryakumar Yadav

- Advertisement -

பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இத்தொடரில் தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதன் காரணமாக அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றவும் வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் தோல்வியை சந்தித்தால் இந்த டி20 கிரிக்கெட் தொடரானது சமநிலையில் முடியும். இந்நிலையில் இந்த போட்டியில் என்னதான் சூரியகுமார் யாதவின் சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி 191 ரன்கள் குவித்தாலும் பவர்பிளே ஓவர்களில் இந்திய அணியின் துவக்கம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடிய விதம் தற்போது பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

Rishabh Pant

ஏனெனில் இன்றைய போட்டியின் பவர்பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 42 ரன்கள் குவித்தாலும் இந்திய அணி இன்னும் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் சமீப காலமாகவே இந்திய அணி துவக்க ஓவர்களில் ரன் குவிக்க தடுமாறி வருவதால் தான் தோல்வியை சந்திக்கிறது என்ற விமர்சனம் இருந்துவரும் வேளையில் பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்திலாவது இளம் வீரர்கள் தங்களது பயமற்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இன்றைய பவர்பிளே ஓவர்களில் 10 ரன்கள் வொயிடு வழியாக எக்ஸ்ட்ராவாக கிடைத்த போதிலும் துவக்க வீரர்களால் வெறும் 32 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

இதையும் படிங்க : நீங்கதான் எக்ஸ்பர்ட் ஆச்சே செலக்டர் வேலைக்கு விண்ணப்பிங்க – ரசிகர்கள் கோரிக்கைக்கு ஆகாஷ் சோப்ரா, பார்திவ் படேல் பதில்

அதிரடிக்கு பெயரெடுத்த இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் கூட அதிரடியாக விளையாடாமல் இப்படி ஒரு மோசமான துவக்கத்தை கொடுத்ததால் எப்பொழுதுதான் இந்திய அணி பயமற்ற விளையாட்டை விளையாடும்? எந்த வீரர்கள் தான் துவக்கத்தில் அதிரடியாக விளையாடுவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement