சூரியகுமாருக்கு நன்றி.. ஓமன் அணிக்கு இந்தியா இந்த 2 ஹெல்ப் செஞ்சா நல்லாருக்கும்.. கேப்டன் கோரிக்கை

Oman Captain
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் ஓமனை 21 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56, அபிஷேக் சர்மா 38, அக்சர் படேல் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய ஓமன் கடுமையாக போராடியும் 20 ஓவரில் 167/4 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

இருப்பினும் அமீரகம், பாகிஸ்தான் ஆகிய அணிகளைக் காட்டிலும் ஓமன் அணி இந்தியாவுக்கு பெரிய சவாலைக் கொடுத்தது என்றே சொல்லலாம். அதனாலேயே போட்டியின் முடிவில் சூரியகுமார் குமார் தலைமையிலான இந்திய அணியினர் அவர்களுக்கு கை கொடுத்து பாராட்டினர். குறிப்பாக கேப்டன் சூரியகுமார் ஓமன் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கை கொடுத்து பாராட்டினார்.

- Advertisement -

சூரியகுமாருக்கு நன்றி:

மேலும் ஓமன் வீரர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய அவர் ஓமன் அணியை சுற்றி நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் தங்களுடைய வீரர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சூரியகுமாருக்கு ஓமன் கேப்டன் ஜடிண்டர் சிங் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவுக்கு வரும் போது தங்களுக்கு பெங்களூருவில் இருக்கும் என்சிஏ’வில் பயிற்சி எடுத்து ரஞ்சிக்கோப்பை அணிகளுடன் விளையாடும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அவர் பிசிசிஐயை கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சூர்யா எங்களிடம் விளையாட்டைப் பற்றி பேசி எங்களைப் பாராட்டியது பெரிய விஷயம். டி20 போட்டியின் பல்வேறு பகுதிகளில் எப்படி விளையாட வேண்டும்? என்பது பற்றி எங்களுடையப் பையன்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு சிறந்த முறையில் பதிலளித்த அவருக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்”

- Advertisement -

இந்தியாவுக்கு கோரிக்கை:

“ஒருவேளை இந்தியா முன்னோக்கி வந்து எங்களுக்கு எங்கள் ஊரில் விளையாடுவது போல அவர்களுடைய ஊரில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். நாங்கள் என்சிஏ’வில் பயிற்சி எடுத்து, திறனில் வேலை செய்து, உடல் மற்றும் மனதளவில் முன்னேறி இந்தியாவில் உள்ள கிளப் மற்றும் ரஞ்சி அணிகளுடன் விளையாடுவோம். அது தரத்துக்கும் எங்களுக்கும் இடையே இருக்கும் இடைவேளையைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும்”

இதையும் படிங்க: அபிஷேக் சர்மா இப்படி ஆடுறது தான் இந்திய அணிக்கு நல்லது.. அவரை விமர்சிக்காதீங்க – அபினவ் முகுந்த் கருத்து

“நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பதால் எங்களுடைய அணியால் பெருமைப்படுகிறேன் என்பதை முதல் நாளிலிருந்தே சொல்லி வருகிறேன். இந்தப் போட்டி நாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதைப் பார்ப்பதற்கு கிடைத்த நல்ல இடமாகும். உலகின் நம்பர் ஒன் அணிக்கு எதிராக எங்களுடைய வீரர்கள் நல்ல போராட்டக் குணத்தைக் காண்பித்தனர். அவர்கள் இப்போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கொண்டுள்ளனர்” என்று கூறினார்.

Advertisement