அறிமுக போட்டியே முடியல அதுக்குள்ள 7 மாசம் சஸ்பெண்ட்டாகவுள்ள இங்கிலாந்து இளம்வீரர் – மன்னிப்பு கேட்டும் விடல

Robinson
- Advertisement -

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான டேவான் கான்வே 200 ரன்கள் அடித்து அறிமுக போட்டியிலேயே அசத்தினார். மேலும் இங்கிலாந்து அணி சார்பாக அறிமுக வீரரான ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

conway 1

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக அறிமுகமான 27 வயது இளம் வீரரான ஒல்லி ராபின்சன் தனது முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி டாம் லாதம், ராஸ் டைலர், கிராண்ட் ஹோம், ஜேமிசன் ஆகியோரது விக்கெட்களை கைப்பற்றினார். சிறப்பான வேகத்திலும், சரியான ஸ்விங்கிலும் பந்துவீசிய அவரின் பந்துவீச்சு ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்தது. அறிமுக போட்டியிலேயே தனது சிறப்பான பந்து வீச்சினால் இங்கிலாந்து அணியின் அடுத்த சிறப்பான பந்து வீச்சாளர் தயாராகிவிட்டார் என்று முதல் நாளே ரசிகர்களின் பாராட்டுகளுக்கு உரிய வீரராக ஒல்லி ராபின்சன் மாறினார்.

- Advertisement -

ஆனால் அவர் நினைத்துக்கூட பார்க்காத விடயம் இரண்டாவது நாளின் போது நடந்தது. அதாவது எட்டு வருடங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட சில பாலியல் மற்றும் இனரீதியான ட்வீட்கள் தற்போது இணையத்தில் வைரலாகின அதனால் எழுந்த சர்ச்சையின் காரணமாக போட்டி தொடங்கிய இரண்டாவது நாளே அவர் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியாகின. அறிமுகம் போட்டியே முடியாத வேளையில் அவர் இரண்டாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அவருக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ollie robinson 2

இதனால் உடனடியாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து : தான் அறியாத வயதில் விவரம் தெரியாத செய்த செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி தான் செய்த தவறுக்கு வெட்கப்படுகிறேன் என்றும், தான் இனவெறியனோ அல்லது செக்ஸ் வெறியனோ அல்ல என்பதையும் தெளிவுபடுத்த விரும்புவதாக கூறி இதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். ஆனால் ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத கிரிக்கெட் வாரியம் அவரது இந்த ட்வீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது. அதன்படி அவர் ட்வீட் போட்டுள்ளது உறுதியாகி உள்ளதால் அவரது மன்னிப்பை நிராகரித்து அவர் மீது கடுமையான தண்டனை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.

Ollie-robinson

அதன்படி அவர் அடுத்த ஏழு மாதங்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் தடை விதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் ஊடகம் செய்திகளை வெளியிட்டுள்ளது. பொதுவாகவே தேசிய அணிக்காக விளையாடுவது என்பது அவ்வளவு எளிதில் கிடைக்காத வாய்ப்பு. ஆனால் அப்படி வாய்ப்பு கிடைத்தும் அறிமுகப் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இவருக்கு ஏற்பட்ட இந்த நிலைமை சற்று பரிதாபத்திற்கு ஒரு உரிய விடயம்தான்.

Advertisement