அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சர்ச்சையில் சிக்கி இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்படவுள்ள பரிதாபம் – நடந்தது என்ன ?

Ollie-robinson
- Advertisement -

இங்கிலாந்து அணி தற்போது நியூசிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்களை குவிக்க அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் குவித்து உள்ள இங்கிலாந்து அணி 267 ரன்கள் பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nz vs Eng

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்கள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஒல்லி ராபின்சன் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதன்படி 27 வயதான ஒல்லி ராபின்சன் தற்போதுதான் நியூசிலாந்து அணிக்கெதிரான இந்த போட்டியில் முதல் முறையாக இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார்.

இப்படி தான் அறிமுகமாகி இன்னும் முதல் போட்டியே முடியாத நிலையில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட என்ன காரணம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசி 75 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இருப்பினும் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்ட காரணம் யாதெனில் : 2012 மற்றும் 13வது ஆண்டுகளில் தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக இனவெறி மற்றும் பாலியல் குறித்த சில சர்ச்சையான ட்வீட்களை இவர் செய்துள்ளார்.

ollie robinson 1

அந்த ட்வீட்டுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் குறிப்பிட்ட ட்வீட் ஒன்றில் : “வீடியோ கேம்ஸ் விளையாடும் பெண்கள் உண்மையிலேயே கேம்ஸ் விளையாடாத பெண்களைவிட அதிக உடலுறவு கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று இனவெறி குறித்தும் அவர் சில சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு இருந்தார் .ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பதிவிட்டு இருந்த இந்த ட்வீட்டுகள் தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையாகி அதன் காரணமாக அவர் மீது அணி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இருக்கிறது.

- Advertisement -

ollie robinson 2

இந்நிலையில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில் : நான் இனவெறிக்கு எதிரான கருத்தையோ அல்லது பாலியல் தொல்லை குறித்தோ கருத்தினை கூறும் நபர் கிடையாது என்று தெரியப்படுத்த விரும்புகிறேன் என பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் என்னுடைய இதுபோன்ற செயல்களுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். இதுபோன்ற கருத்துக்களை நான் பதிவிட்டல் வெட்கப்படுகிறேன். ஆனால் அதெல்லாம் நான் முதிர்ச்சி அடையாத மனநிலையில் இருந்த போது செய்தவை. இப்போது நான் ஒரு முதிர்ச்சி அடைந்த மனிதராக மாறி உள்ளேன் என்னுடைய டிவீட்டுக்கு முழுமையாக வருந்துகிறேன், கடந்த காலத்தில் செய்த சிந்தனையற்ற செயல்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார் .

Ollie Robinson 3

இருப்பினும் இவரின் இந்த மோசமான செயல் குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் நிர்வாகம் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. எதிர்காலத்தில் அணியில் புதிதாக இணையும் வீரர்களுக்கு முன்னுதாரணமாக தப்பு செய்த இவரை நீக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், ராபின்சனின் இந்த செயலுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது போட்டியில் நிச்சயம் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement