எவ்வளவு சொல்லியும் கேக்கல. அறிமுக போட்டி முடிஞ்சதும் 7 மாதம் தடை விதிக்கப்பட்ட இங்கி வீரர் – விவரம் இதோ

Robinson

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2 ஆம் தேதி துவங்கி நேற்று 6 ஆம் தேதி முடிவடைந்தது. இந்த போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் ஐந்தாம் நாள் முடிவில் எந்த அணிக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் போட்டி சமநிலையில் முடிந்துள்ளது.

Nz vs Eng

இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான ஒல்லி ராபின்சன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதுமட்டுமின்றி முதல் இன்னிங்சில் பேட்டிங்கிலும் 42 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணிக்கு கைகொடுத்தார்.

- Advertisement -

ஆல்-ரவுண்டராக முதல் போட்டியில் அறிமுகமாகி தனது அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் இங்கிலாந்து அணியின் நம்பிக்கைக்குரிய வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஏற்கனவே அவர் மீது எழுந்த சர்ச்சை காரணமாக தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய முடிவினை எடுத்துள்ளது.

Ollie-robinson

அதன்படி 27 வயதான ராபின்சன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இனவெறி மற்றும் பாலியல் சர்ச்சை குறித்த சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டிருந்தார். இதன்காரணமாக அவர் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரது இந்த குற்றம் குறித்து ஆய்வு செய்தது. முடிவில் இந்த சர்ச்சையான கருத்துக்களை ராபின்சன் தான் பதிவிட்டார் என்பது உறுதியான நிலையில் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு கடுமையான தண்டனை விதித்துள்ளது.

- Advertisement -

Ollie Robinson 3

தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி 7 விக்கெட் மற்றும் 42 ரன்கள் குவித்து இருந்தாலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்றும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் ஏழு மாசம் தடை செய்யப்படுவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அவர் தற்போது மீண்டும் உள்ளூர் அணிக்காக விளையாட திரும்ப வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement