- Advertisement -
உலக கிரிக்கெட்

7 நாடுகள் 7 சதங்கள்.. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத தனித்துவ சாதனையை படைத்த ஓலி போப்

இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி விட்டது. அந்த நிலையில் சம்பிரதாய கடைசிப் போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு டான் லாரன்ஸ் 5, ஜோ ரூட் 8 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஓலி போப் தமது பங்கிற்கு வேகமாக குவித்தார்.

- Advertisement -

ஓலி போப் அசத்தல்:

அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டை போட அதிரடியாக விளையாடிய அந்த ஜோடியில் பென் டக்கெட் அரை சதமடித்து 86 (79) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஓலி போப் சதமடித்து 13 பவுண்டரி 2 சிக்சருடன் 103* (103) குவித்தார். அதனால் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 221-3 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்துக்கு களத்தில் ஓலி போப் 103*, ஹரி ப்ரூக் 8* ரன்களுடன் உள்ளனர்.

முன்னதாக இந்தப் போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து ஓலி போப் தனது டெஸ்ட் கேரியரில் இதுவரை 48 போட்டிகளில் 7* சதங்கள் அடித்துள்ளார். ஆச்சர்யப்படும் வகையில் அந்த 7 சதங்களையும் அவர் 7 வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக அடித்துள்ளார். ஆம் கடந்த 2020ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஓலி போப் 135 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

தனித்துவ சாதனை:

அதன் பின் 2 வருடங்கள் கழித்து 2022ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நாட்டிங்கம் மைதானத்தில் அவர் 145 ரன்கள் அடித்தார். அதைத் தொடர்ந்து 2022 டிசம்பரில் பாகிஸ்தானுக்கு எதிராக ராவில்பிண்டி நகரில் 108 ரன்கள் விளாசிய அவர் 2023 ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 208 ரன்கள் விளாசினார்.

இதையும் படிங்க: ருதுராஜ் கெய்க்வாட்டிடம் வேலையை காட்டி சி.எஸ்.கே ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஹர்ஷித் ராணா – என்ன நடந்தது?

அதைத் தொடர்ந்து 2024 ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக ஹைதராபாத் நகரில் 196 ரன்கள் அடித்த போப் தற்போது இலங்கைக்கு எதிராக 103* ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 7 சதத்தையும் 7 வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையை ஓலி போப் படைத்துள்ளார். வரலாற்றில் வேறு எந்த வீரரும் தங்களது முதல் 7 சதங்களை 7 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்ததில்லை.

- Advertisement -