கொல்கத்தா அணிக்கு இனிமே ரசல் வேணாம். அவரால பெருசா எதும் பண்ண முடியாது – விளாசிய இந்திய முன்னாள் வீரர்

Russell
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 32 ஆவது போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக தேர்வு செய்தார்.

kkrvsmi

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி மிக மோசமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 148 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கம்மின்ஸ் 53 ரன்களும் மோர்கன் 39 ரன்களை குவித்தனர். அதனை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

அந்த அணியின் துவக்க வீரர் குவிண்டன் டிகாக் 78 ரன்களும் பாண்டியா 21 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி போட்டியை எளிதில் வென்று மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது. ஆட்டநாயகனாக டிகாக் தேர்வானார்.

Russell

இந்நிலையில் கொல்கத்தா அணியின் இந்த தொடர் தோல்விகளை அடுத்து இந்த தொடரில் சிறப்பாக விளையாடாமல் இருக்கும், சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரசல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரக்யான் ஓஜா தனது கருத்துக்களை காட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் :

- Advertisement -

ஆண்ட்ரு ரசல் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர் இல்லை. அவரது ஆட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன் ரசல் எப்படி விளையாடினாரோ அதேபோன்று இப்போதும் விளையாடுகிறார். அவரது விளையாட்டில் எந்த முன்னேற்றமும் கிடையாது. அவர் கொல்கத்தா அணிக்கு ஒரு சுமையாகவே உள்ளார்.

Ojha

ஒரு கிரிக்கெட் வீரர் தனது விளையாட்டில் எப்போதும் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். ஆனால் இவரிடம் எந்த முன்னேற்றமும் இல்லை என்று ஓஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement